எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு அரசு இடங்களுக்கான முதல்கட்ட கலந்தாய்வு முடிவடைந்தது. 4,546 இடங்கள் நிரம்பின. இரண்டாம் கட்ட கலந்தாய்வு செப்டம்பர் 2-ம் தேதி தொடங்குகிறது.
அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு, சென்னை அண்ணாசாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் கடந்த 24-ம் தேதி தொடங்கியது.அன்றைய தினம் நடந்த சிறப்பு பிரிவினருக்கானகலந்தாய்வில் 14 மாணவர்களுக்கு கல்லூரிகளில் சேர்வதற்கான அனுமதி கடிதம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 25-ம் தேதி பொது பிரிவினர்களுக்கான கலந்தாய்வு தொடங்கியது.முதல் நாளில் 1,029 பேரும், இரண்டாம் நாளில் 1,260 பேரும், மூன்றாம் நாளில் 706 பேரும், நான்காம் நாளில் 743 பேரும், ஐந்தாம் நாளில் 606 பேரும் கல்லூரிகளில் சேர்வதற்கான அனுமதி கடிதத்தை பெற்றனர்.இந்நிலையில் தாழ்த்தப்பட்டோர் (எஸ்சி), தாழ்த்தப்பட்டோர் அருந்ததியர் (எஸ்சிஏ) மற்றும் பழங்குடியினர் (எஸ்டி) பிரிவினருக்கான கலந்தாய்வு நேற்று நடந்தது.தாழ்த்தப்பட்டவர்களுக்கான இடங் கள் முடிந்துவிட்ட நிலையில், கலந்தாய்வுக்கு வந்தவர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில்ஈடுபட்டனர்.இதனால் கலந்தாய்வில் சிறிது நேரம் பரபரப்புஏற்பட்டது. நேற்று நடந்த கலந்தாய்வில் 188 பேர் கல்லூரிகளில் சேர்வதற்கான அனுமதி கடிதம் பெற்றனர்.
நேற்றுடன் அரசு இடங்களுக்கான கலந்தாய்வு முடிவடைந்தது.கலந்தாய்வு முடிவில் அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான 4,731எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களில் 4,546 இடங்கள் நிரம்பின.தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் மீதமுள்ள அரசு ஒதுக்கீட்டு 185 எம்பிபிஎஸ்இடங்கள் மற்றும் கல்லூரிகளில் சேராத மாணவர்களால் ஏற்படும் காலியிடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு செப்டம்பர் 2 மற்றும் 3-ம் தேதிகளில் நடைபெற உள்ளது.