நீட் அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு நடப்பதால் தமிழகத்தில் மாநில பாடத்திட்ட மாணவர்கள் 500 பேருக்கு மட்டுமே இடம் கிடைக்க வாய்ப்பு. - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Tuesday 22 August 2017

நீட் அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு நடப்பதால் தமிழகத்தில் மாநில பாடத்திட்ட மாணவர்கள் 500 பேருக்கு மட்டுமே இடம் கிடைக்க வாய்ப்பு.

நீட் தேர்வு அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்படுவதால், மாநில பாடத் திட்டத்தில் படித்த 500 மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை நடத்த உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. அதன்படி, நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்தரவரிசைப் பட்டியல் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நாளை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடக்கிறது.

நாளைமறுநாள் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்குகிறது.இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.செந்தில், அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் அமைப்புச் செயலாளர் ஏ.ராமலிங்கம் ஆகியோர் கூறியதாவது:நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 7-ம் தேதி நடந்தது. தமிழகத்தில் இருந்து சுமார் 85 ஆயிரம் பேர் எழுதினர்.சிபிஎஸ்இ பாடத்திட்ட அடிப்படையிலான தேர்வு என்பதால், மாநில பாடத்திட்ட மாணவர்கள் மிகவும் சிரமப்பட்டனர். தமிழகத்தில் எத்தனைபேர் நீட் தேர்வில் தகுதி பெற்றுள்ளனர் என்ற பட்டியலை சிபிஎஸ்இ வெளியிடவில்லை.

நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளதால், சிபிஎஸ்இ உள்ளிட்ட மத்திய பாடத்திட்ட மாணவர்கள்தான் பெரும்பாலான இடங்களை பிடிப்பார்கள். மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு சுமார் 500 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றனர்.தமிழ்நாடு உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் சாமி.சத்தியமூர்த்தி கூறியபோது, ‘‘நீட் தேர்வால் கிராமப்புற, ஏழைமாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வசதியான மாணவர்கள் தனியாக பயிற்சி மையங்களில் படித்து நீட் தேர்வில் தகுதி பெற்றுள்ளனர். நீட் தேர்வால் பயிற்சி மையங்கள்தான் அதிகரித்துள்ளன. நீட் தேர்வின் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தினால் மாநில பாடத்திட்டத்தில் படித்த 500 மாணவர்கள் மட்டுமே மருத்துவம் படிக்க இடம் கிடைக்கும். அதனால் நீட் மதிப்பெண் மற்றும் பிளஸ்2 மதிப்பெண் இரண்டையும் கணக்கில்கொண்டு கலந்தாய்வு நடத்த வேண்டும்’’ என்றார்.

எத்தனை இடங்கள்:

தமிழகத்தில் 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3,050 எம்பிபிஎஸ் இடங்கள், 2 அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 200 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இதில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீத இடங்கள் போக, 2,594 எம்பிபிஎஸ் இடங்கள், 170 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இதுதவிர 10 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 783 எம்பிபிஎஸ் இடங்கள், 18 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 1,020 பிடிஎஸ் இடங்கள் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு உள்ளன. இந்த அரசு இடங்கள் மற்றும் 10 தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ள 517 எம்பிபிஎஸ் இடங்கள், 18 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ள 690 பிடிஎஸ் இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப் படுகின்றன.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot