புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 765 கணினி ஆசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் போட்டித்தேர்வு நடத்தி நிரப்ப ஆணையிடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து போட்டித்தேர்வு அறிவிப்பினை வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பள்ளிக் கல்வித் துறையின் செயலர் த.உதயச்சந்திரன் வெளியிட்டுள்ள அரசாணையில் (அரசாணை எண் 175, நாள் 21.7.2017) கூறியிருப்பதாவது: நடப்பு கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் 3,336 முதுகலை பட்ட தாரி ஆசிரியர், 748 கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 2007-08 கல்வி ஆண்டு முதல் 2017-18 கல்வி ஆண்டு வரை 765 பள்ளிகளுக்கு கணினி ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப வேண்டி யுள்ளது என்றும் அரசின் தற் போதைய கொள்கையின்படி நேரடி நியமனம் மூலம் நிரப்பும் வகையில் போட்டித் தேர்வு நடத்தி நியமனம் மேற்கொள்ள பள்ளிக் கல்வி இயக்குநர் அரசை கோரியுள்ளார். அவரது கருத்துரு ஆய்வு செய்யப்பட்டு, புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 765 கணினி ஆசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் போட்டித்தேர்வு நடத்தி நிரப்ப ஆணையிடப்படுகிறது.
Downlod GO...

No comments:
Post a Comment