துாய்மை இந்தியா' திட்டத்தின் கீழ், இந்திய அளவில் துாய்மைமிகு பள்ளிக்கான தேசிய விருதுக்கு, பழநி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தேர்வாகியுள்ளது.
பிரதமரின் துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் சார்பில், 2016ல் சுத்தமான குடிநீர், சுகாதாரமானச் சுற்றுச்சூழல், துாய்மையான கழிப்பறை வசதிகள் உள்ள பள்ளிகள் மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்டன.
திண்டுக்கல் மாவட்டத்தில், பழநி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி இத்திட்டத்தில், மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றது.இதில், இந்திய அளவில், 30 நகர்ப்புற உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் தேசிய விருது பெற தேர்வாகியுள்ளன. அதில், பழநி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியும் ஒன்று.
பள்ளி தலைமையாசிரியர் பழனிசாமி கூறுகையில், ''ஆசிரியர்கள், மாணவர்கள் ஒத்துழைப்பால் துாய்மைமிகு இந்தியா திட்டத்தில் தேசிய விருது கிடைத்துஉள்ளது. செப்., 1ல் டில்லியில் நடைபெறும் விழாவில், விருது வழங்கப்படுகிறது,'' என்றார்.