பி.இ. கலந்தாய்வுக்குப் பிறகு மருத்துவத்தில் மாணவர்கள் சேர்ந்தால் பொறியியல் இடங்கள் காலியாக விடப்படும்: அமைச்சர் அன்பழகன் தகவல - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Wednesday, 2 August 2017

பி.இ. கலந்தாய்வுக்குப் பிறகு மருத்துவத்தில் மாணவர்கள் சேர்ந்தால் பொறியியல் இடங்கள் காலியாக விடப்படும்: அமைச்சர் அன்பழகன் தகவல

பொறியியல் கலந்தாய்வில் கிடைத்த இடங்களை மருத் துவ கலந்தாய்வுக்கு பின்னர் மாணவர்கள் விட்டுச் செல் லும்போது அவை காலியாகவே இருக்கும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்தார்.
சென்னை அண்ணா பல் கலைக்கழகத்தின் நூலகம் மற் றும் குஜராத் இன்ஃபிலிப்நெட் மையம் ஆகியவை சார்பில் நூலகங்களை தானியங்கி முறையில் நவீனமாக்குவது தொடர்பான ‘கேலிபர் 2017’ என்ற 3 நாள் கருத்தரங்கம் நேற்று பல்கலைக்கழக வளா கத்தில் தொடங்கியது.

 இதனை அமைச்சர் கே.பி. அன்பழகன் தொடங்கி வைத்தார்.அப்போது அவர் பேசியது:

தகவல் தொழில்நுட்ப வளர்ச் சியின் காரணமாக புத்தகங்கள் டிஜிட்டல் முறையில் மாற் றப்பட்டு வருகின்றன. அனைத்து நூல்களையும் மின்னணு முறையில் உருவாக்க வேண்டும். நூலகத்தை தேடி வெளியே செல்லும் நிலை மாறி, செல்போன் போன்ற கருவிகளால் நூலகமே நம்மை தேடி வரும் நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.முழுமையடைந்த பணிகள்தமிழகத்தில் உள்ள 13 பல்கலைக்கழகங்களின் நூல கங்களும் டிஜிட்டல் முறை யில் இணைக்கப்படும் என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அந்தப் பணிகள்தற்போது முழுமையடைந்துள்ளது. விரைவில் இந்தவசதி செயல்பாட்டுக்கு வரும். இவ்வாறு அவர் பேசினார்.இந்த நிகழ்ச்சியில் உயர் கல்வித் துறை செயலாளர் சுனில் பாலிவால், தொழில்நுட்பக் கல்வி ஆணையர் ரஜேந்திர ரத்னூ, உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய முதன்மைசெயல் அதிகாரி பவன்குமார் அகர்வால், இன்ஃபிலிப்நெட் மைய இயக்குநர் ஜெக்தீஷ் அரோரா, பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சி முடிந்து வெளியில் வந்த அமைச்சரிடம் மதுரை காமராஜ் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் குறித்த சர்ச்சைகள் குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு துணைவேந்தரை தேர்வு செய்ய அமைத்த 3 நபர் குழுவினர் பரிந்துரைத்த பெயர்களில் இருந்தவரையே ஆளுநர் தேர்வு செய்துள்ளார். அந்த குழுவுக்கும் சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தது என பதில் அளித்தார்.

விரைவில் அறிவிப்பு

தொடர்ந்து அவர் கூறியது: அண்ணா பல்கலைக்கழகத் துக்கு துணைவேந்தர் விரை வில் நியமிக்கப்படுவார். நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதே தமிழக அரசின் குறிக்கோள். விரைவில் நீட் தேர்வு விலக்கு பெற்றதற்கான அறிவிப்பு வெளியாகும்.மருத்துவ கலந்தாய்வு நடக்கும்போது பொறியியல் கல்லூரிகளில் நிரப்பப்பட்ட இடங்கள் காலியாகும். அதனை ஒன்றுமே செய்ய முடியாது. அந்த இடங்கள் காலியாகவே இருக்கும்.இந்த பிரச்சனையை எதிர்கொள்ள அடுத்த ஆண்டு முதல் இணையதள கலந்தாய்வு நடத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot