அரசுப் பள்ளியில் சேர்க்க கட்டாயப்படுத்த முடியாது: தங்கள் குழந்தைகளுக்கான பள்ளியை தேர்வு செய்வது ஆசிரியர்களின் உரிமை - உயர் நீதிமன்றத்தில் பள்ளிக்கல்வித் துறை பதில் மனு - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Friday 18 August 2017

அரசுப் பள்ளியில் சேர்க்க கட்டாயப்படுத்த முடியாது: தங்கள் குழந்தைகளுக்கான பள்ளியை தேர்வு செய்வது ஆசிரியர்களின் உரிமை - உயர் நீதிமன்றத்தில் பள்ளிக்கல்வித் துறை பதில் மனு

அரசு ஆசிரியர்கள், மற்ற பெற்றோரைப் போலவே தாங்கள் விரும்பும் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்கலாம்; அதற்கான உரிமை அவர்களுக்கு உள்ளது என்று தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
ஆங்கில வழி வகுப்புகளைத் தொடங்க அனுமதி வழங்குமாறு தமிழக பள்ளிக் கல்வித் துறை செயலருக்கு உத்தரவிடக் கோரி அரசு உதவி பெறும் பள்ளிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், கடந்த ஜூன் 27-ம் தேதி 20 கேள்விகளை எழுப்பியிருந்தார்.

அவற்றுக்கு பதிலளிக்கும் வகையில், தமிழக பள்ளிக் கல்வித் துறை செயலர் சார்பாக இணை செயலர் கே.நந்தகுமார், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறியிருப்பதாவது:ஆங்கில வழியில் குழந்தைகளுக்கு கல்வி வழங்கபெற்றோர் விரும்புவதால் கடந்த 2012 – 13-ம் ஆண்டு முதல் சோதனை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பள்ளிகளில் 1 முதல் 6-ம் வகுப்பு வரை தமிழ் வழி வகுப்புகளுக்கு இணையாக ஆங்கில வகுப்புகள் அறிமுகம் செய்யப்பட்டன. மாநிலம் முழுவதும் உள்ள 37,211 அரசு ஆரம்பப் பள்ளி, உயர்நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளிகளில் 13,789 பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆங்கில வழி வகுப்பு களைக் கையாள தங்களால் முடியும் என ஆசிரியர்கள் கருதும் பள்ளிகளில் மட்டும் அந்த வகுப்புகள் தொடங்கப்படு கின்றன.தமிழகத்தில் 64.16 சதவீத மாணவ, மாணவிகள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்தான் படிக்கின்றனர். தனியார் பள்ளிகளில் 35.84 சதவீதத்தினர் மட்டுமே படிக்கின்றனர். அரசுப் பள்ளிகளில் கல்வித் தரத்தை அதிகரிக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஆசிரியர்களின் உரிமை

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்தால் அவற்றின் தரத்தை மேம்படுத்த முடியும் என்ற உயர் நீதிமன்றத்தின் எதிர்பார்ப்பு நியாயமானதுதான். ஆனால், ஆசிரியரும் பெற்றோர்தான். அந்த வகையில் தங்கள் குழந்தைகளைச் சேர்ப்பதற்கான பள்ளியை தேர்ந்தெடுக்க அவர்களுக்கு உரிமை உள்ளது.கட்டாயப்படுத்த முடியாதுதங்கள் குழந்தைக்கு எது சிறந்தது என்பதை தேர்ந்தெடுக்கும் உரிமையை ஆசிரியர்களுக்குமறுக்க இயலாது. அது அவர்களது அடிப்படை உரிமை. அவர்களை கட்டாயப்படுத்த முடியாது. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் மனமாற்றம் ஏற்பட்டு, அவர்களாகவே தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்தால் மட்டுமே நீதிமன்றத்தின் கருத்து நனைவாகும்.பல அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்துள்ளனர்.

910 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை

கடந்த 2013 முதல் 2017-ம் ஆண்டு வரை, சரியான நேரத்துக்கு பள்ளிக்கு வராத 300 ஆசிரியர்கள் மீதும், கடமை தவறியதாக 610 ஆசிரியர்கள் மீதும் என மொத்தம் 910 ஆசிரியர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பயோமெட்ரிக் வருகைப் பதிவு நடைமுறையை அமல்படுத்த அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது.பெரம்பலூர் மாவட்டத்தில் சோதனை முயற்சியாக இந்த திட்டத்தை செயல்படுத்தும் நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளன. சோதனை முயற்சிக்குப்பின், அனைத்து கல்வி மாவட்டங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

சங்கம் அமைக்கும் உரிமை

காவல் துறையினர், ராணுவத்தினர் சங்கம் அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளதைப் போல, ஆசிரியர்கள் சங்கம் அமைக்க தடை விதிக்க வேண்டும் என்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. பிற அமைப்பு சார்ந்த தொழிலாளர்களுக்கு உள்ளஉரிமைகளை ஆசிரியர்களுக்கு மறுக்க முடியாது.இவ்வாறு பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot