இலவச, 'லேப் - டாப்' திட்டம் தமிழகத்தில் மீண்டும் துவக்கம் !! - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Wednesday 30 August 2017

இலவச, 'லேப் - டாப்' திட்டம் தமிழகத்தில் மீண்டும் துவக்கம் !!

தமிழகத்தில், நிறுத்தப்பட்டிருந்த இலவச, 'லேப் - டாப்' வழங்கும் திட்டம், மீண்டும் துவக்கப்பட்டு உள்ளது.தமிழகத்தில், 2011 முதல், அரசு பள்ளிகள் மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் ,பயிலும், மாணவ மாணவியருக்கு, இலவசமாக 'லேப் -- டாப்' வழங்கப்படுகிறது.
2016 வரை, 40 லட்சம், 'லேப் - டாப்'கள் வழங்கப்பட்டன. கடந்த, 2016ல், இந்த வினியோகம்,திடீரெனநிறுத்தப்பட்ட தால், ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட, மாணவ மாணவியர் ஏமாற்றம் அடைந்தனர். தற்போது, இந்த பணி மீண்டும் துவக்கப்பட்டுஉள்ளது.

இது குறித்து, தகவல் தொழில்நுட்பத் துறை அதிகாரிகள் கூறியதாவது: டெண்டரில் பங்கேற்ற நிறுவனம் ஒன்று, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் ததால், 2016ல், மாணவ மாணவியருக்கு, 'லேப் - டாப்' வழங்க முடியாமல் போனது. தற்போது, அந்த வழக்கு முடிந்துவிட்டது. அதனால், 'லேப் - டாப்' வழங்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு வழங்குவதற்கான, 'லேப் - டாப்' விரைவில் கொள்முதல் செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot