- Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Friday 18 August 2017

அறிவியல் செயல் முறை பயிற்சி

மாணவர்கள் தானே செய்து கற்றல் 



தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் நடமாடும் அறிவியல் வாகனம் மூலம் அறிவியல்  செயல் முறை விளக்கமளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

                                      நிகழ்விற்கு வந்தவர்களை ஆசிரியை முத்து மீனாள்  வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.அகஸ்தியா அறக்கட்டளை மற்றும் அமுமு அறக்கட்டளையும் இணைந்து நடத்தும் இந்த அறிவியல் வாகனம் மூலம்  உபகரணங்களை கொண்டு அறிவியல் சார்ந்த விளக்கங்களை  சோதனை மூலம் சென்னையை சார்ந்த பயிற்சியாளர் கவியரசு மற்றும் திருநெல்வேலியை சார்ந்த முத்து செல்வன்  ஆகியோர் நேரடியாக மாணவர்களுக்கு செய்து காண்பித்தார்கள் .இயக்கத்தின் வகைகளான நேர்கோட்டு இயக்கம்,வட இயக்கம்,சுழற்சி இயக்கம்,தன்னிச்சை இயக்கம்,பொருள்களின் தன்மை,விசை வகைகள் ,அழுத்தத்தின் வகைகள் ஆகியவற்றை பல்வேறு நேரடி சோதனைகளை செய்து காண்பித்தும்,விளையாட்டு முறையின் வாயிலாகவும்  தெளிவாக விளக்கம் அளித்தனர்.மாணவர்கள் ரஞ்சித்,ஜெனிபர் ,சக்தி,உமா மஹேஸ்வரி,சின்னம்மாள் ,நந்தகுமார்,ராஜேஷ் ஆகியோர் ஆர்வமுடன் சந்தேகங்களை கேட்டு,நேரடியாக சோதனைகளை செய்து பார்த்து தெளிவு பெற்றனர். நிறைவாக ஆசிரியை முத்து லெட்சுமி நன்றி கூறினார்.

பட விளக்கம் ; தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் நடமாடும் அறிவியல் வாகனம் வாயிலாக மாணவர்களுக்கு சோதனைகளை அமுமு அறக்கட்டளை   மற்றும் அகஸ்தியா அறக்கட்டளையின் பயிற்சியாளர் கவியரசு ,முத்து செல்வன் செய்து காண்பித்தார்கள் .

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot