- Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Wednesday 16 August 2017

சாக்லெட்டுக்கு பதில் கடலை மிட்டாய் 

சுதந்திர தின விழா 
 
 தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் சுதந்திர  தின விழா நடைபெற்றது.சாக்லெட்டுக்கு பதில் கடலை மிட்டாய் வழங்கப்பட்டது.



  விழாவிற்கு வந்தவர்களை பள்ளி ஆசிரியை முத்துலெட்சுமி வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார் .சுதந்திர  தின விழா தொடர்பாக தேசிய சின்னங்கள்,நமது தேச தந்தை,தேசிய கீதத்தின் சிறப்பு,வந்தே மாதரம்  பாரதியும் நாட்டு விடுதலையும் போன்ற தலைப்புகளில் மாணவர்கள் பிரஜித்,முத்தையா ,வெங்கட்ராமன்,மகாலெட்சுமி,அஜய் பிரகாஷ்,சஞ்சீவ்,சின்னம்மாள் ஆகியோர் பேசினார்கள்.தேவகோட்டை ஜமீன்தார் சோம .நாராயணன் செட்டியார் கொடி ஏற்றி தலைமையுரை நிகழ்த்தினார்.மாணவர்களுக்கும் ,ஆசிரியர்களுக்கும்,பெற்றோர்களுக்கும்   அனைவருக்கும் சாக்லேட் தவிர்த்து  கடலை மிட்டாய் இனிப்பு  வழங்கப்பட்டது.இப்பள்ளியில் தொடர்ந்து பல ஆண்டுகளாக மாணவர்களின் பிறந்த நாள்களுக்கு அவர்களே சாக்லேட் தவிர்த்து கடலை அச்சு மிட்டாய் இனிப்பாக வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.ஆங்கிலத்தில் தேசிய புரட்சிகள் தொடர்பாக கார்த்திகேயனும் ,கலை நிகழ்ச்சிகளில் சக்திவேல்,ஐயப்பன்,சபரி,விக்னேஷ்,ரஞ்சித் ஆகியோர் நடனம் ஆடினார்கள். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.விழா நிறைவாக மாணவி காயத்ரி நன்றி கூறினார்.ஆசிரியர் ஸ்ரீதர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தார்.

பட விளக்கம் ; தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர  தின விழாவில் தேவகோட்டை ஜமீன்தார் சோம .நாராயணன் செட்டியார் கொடி ஏற்றி மாணவர்களுக்கு பரிசுகளையும் ,கடலாய் மிட்டாய் இனிப்பையும் வழங்கினார்.உடன் பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் உள்ளார்.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot