JIO - வின் புதிய ஆஃபர் அறிவிப்பு - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Wednesday 16 August 2017

JIO - வின் புதிய ஆஃபர் அறிவிப்பு


ரிலையன்ஸ் ஜியோ வழங்கிய ‘தன் தனா தன்’ சலுகை நிறைவு பெற்றுவருவதையொட்டி அடுத்து ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஜியோ நிறுவனம் புதிய கேஷ்பேக் சலுகைகளை வழங்குகிறது.
வாடிக்கையாளர்களை தன்வசம் வைத்து கொள்ள இந்த புதிய சலுகையை ஜியோ அறிவித்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்த ‘தன் தனாதன்’ சலுகை நிறைவு பெற இருப்பதைத் தொடர்ந்து ஜியோ திட்டங்களின் விலையை மாற்றியமைத்தது. இதன்படி பேடிஎம் தளத்தில் ரூ.300-க்கும் அதிகமான விலையில் ரீசார்ஜ் செய்வோருக்கு ரூ.76 கேஷ்பேக் வழங்கப்படவுள்ளதாக ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. பேடிஎம் தளத்தில் ரிலையன்ஸ் ஜியோ ரீசார்ஜ் செய்ய முதலில் போஸ்ட்பெயிடா அல்லது ப்ரிப்பெயிடா என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். பின் ஜியோ மொபைல் நம்பரை பதிவு செய்து ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். அதன்பின் பேடிஎம் தளத்தில் காணப்படும் லிங்க் (Havea promo code?) ஆப்ஷனை கிளிக் செய்து உங்களுக்கு வரும் ப்ரொமோ கோடினை பதிவு செய்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.

ரிலையன்ஸ் ஜியோ ரீசார்ஜ் செய்வோருக்கான ப்ரொமோ கோடு பேடிஎம் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தும் முன் ப்ரொமோ கோடினை தெளிவாக படித்து அதன்பின் பதிவிட வேண்டும். ரீசார்ஜ் செய்யப்பட்டதும் 24 மணி நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கான கேஷ்பேக் பேடிஎம் கணக்கில் சேர்க்கப்படும். மேலும் போன் பே ஆப் (PhonePe app)மூலம் ரிலையன்ஸ் ஜியோ எண்ணிற்கு ரூ.300-க்கும் அதிக விலையில் ரீசார்ஜ் செய்வோருக்கு ரூ.75 கேஷ்பேக் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஜியோ ப்ரைம் வாடிக்கையாளராக, ஆண்டு கட்டணமாக ரூ.99 கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவித்தது. ஆனால் அதன்பின் ஜியோ ப்ரைம் உறுப்பினராகஜியோ மணி என்ற இ-வாலட் மொபைல் அப்ளிகேஷனை பதிவிறக்கும் செய்து அதன் மூலம் ரூ.99 மற்றும் ரூ.303 க்கு ரீசார்ஜ் செய்தால் ரூ.50 கேஷ்-பேக் சலுகை அளிக்கப்படும் என ஜியோ நிறுவனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot