பொதுத்துறை நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்: நிறுவனம் மாதம் 143 ரூபாய் கட்டணத்தில் தினந்தோறும் ஒரு ஜி.பி. இணைய சேவை மற்றும் அளவில்லை இலவச அழைப்பு சலுகைகளை ப்ரீபெய்ட் மொபைல் வாடிக்கையாளர்களுக்கு அதிரடியாக அறிவித்துள்ளது.
மேலும், 429 ரூபாய் கட்டணமாகச் செலுத்தி 90 நாட்களுக்கு தினந்தோறும் ஒரு ஜி.பி. இணைய சேவை மற்றும் இலவச அழைப்பை பெறலாம்.
இந்த இரு திட்டங்களிலும் (கேரள வட்டம் தவிர) எந்த வரையறையும் இன்றி இலவசமாக உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு பேசிக்கொள்ளலாம். இலவச அழைப்பானது பிஎஸ்என்எல் மட்டுமின்றி மற்ற தொலைத்தொடர்பு நிறுவன எண்களுக்கும் பொருந்தும் என்று தெரிவித்துள்ளது.
அதிரடி இணைய சேவை மற்றும் அளவில்லை அழைப்புகளை ரிலையன்ஸ் ஜியோ இலவசமாக வழங்கியதை அடுத்து ஏற்பட்ட தொழில் போட்டியால், இதர நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து சலுகைகளுக்கான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.