இலவச ஜியோ போன் பெறுவதற்காக இதுவரை 6 மில்லியன் நபர்கள்முன்பதிவு செய்துள்ளனர்.அதாவது,ரூ.1500 இல் ஜியோ இலவச மொபைலை பெறுவதற்கு, ஆகஸ்ட் 24 ஆம் தேதி முதல் முன்பதிவுசெய்துக் கொள்ளலாம் என ஜியோவின் அதிகாரபூர்வ பக்கத்தில் வெளியிடப் பட்டது.
இதனை தொடர்ந்து, ஆகஸ்ட் 24 -ஆம் தேதியன்று தொடங்கிய இலவசமுன்பதிவு 26 ஆம் தேதி வரை மட்டுமே தொடர்ந்தது.
காரணம் 5 மில்லியன் இலவச போன்களுக்கு மட்டும் திட்டம் வைத்திருந்தது ஜியோ. ஆனால் எதிர்பார்த்ததை விட அதிக அளவில் முன்பதிவு செய்ததால் ஜியோ விற்பனை நிறுத்தப்பட்டதுஇந்நிலையில்,ஜியோ போன் முன்பதிவு செய்தவர்களுக்கு வரும்21 ஆம் தேதி முதல் போன் டெலிவரி செய்ய உள்ளதாக ஜியோ தெரிவித்துள்ளது.மேலும், மொபைல் பெறும்போது கொடுக்கப்படும் ரூ.1500 -ஐ, 3 ஆண்டுகள் கழித்து மீண்டும் அந்த பணத்தை ஜியோ திருப்பிகொடுத்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.