சென்னை உட்பட மூன்று மாவட்டங்களில், அதிகவேக இன்டர்நெட் இணைப்புக்காக, '4ஜி' சேவையை, பி.எஸ்.என்.எல்., நிறுவனம் துவங்கஉள்ளது; இதற்காக, 200 தொலை தொடர்பு கோபுரங்களை நிறுவ உள்ளது.
தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களில் பெரும்பாலானவை, '௪ஜி' சேவை தருகின்றன. பி.எஸ்.என்.எல்., மட்டும், மிகவும் கால தாமதமாக தற்போது, '௪ஜி'க்கு மாற முடிவு செய்துள்ளது. முதலில், மூன்று மாவட்டங்களில் அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.
இது குறித்து, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை உள்ளடக்கிய, சென்னை தொலை தொடர்பு வட்டார, பி.எஸ்.என்.எல்., பொது மேலாளர், கலாவதி கூறியதாவது:
எங்கள் வாடிக்கையாளர்களில், 80 சதவீதம் பேர், '4ஜி' வசதி இல்லாத, சாதாரண மொபைல் போன்களை பயன்படுத்துகின்றனர். 20 சதவீதம் பேர் தான், இன்டர்நெட் பயன்படுத்துகின்றனர். அதனால் தான், 2ஜி, 3ஜி, 'டவர்'களுக்கு, பி.எஸ்.என்.எல்., தொடர்ந்து முக்கியத்துவம் தருகிறது.
எனினும், தனியார் போட்டியை சமாளிப்பதற்காகவும், இன்டர்நெட் உபயோகிப்பாளர்கள் நலன் கருதியும், '4ஜி' சேவையைத் துவக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது, 200 டவர்களை கொள்முதல் செய்ய, 'டெண்டர்' இறுதி செய்யப்பட்டு விட்டது; அக்டோபரில் கொள்முதல் நிறைவடைந்து, நிறுவும் பணிகள் துவங்கும். இவ்வாறு அவர் கூறினார்.