தமிழகத்தில் கல்வி மாவட்டம் வாரியாக நீட் தேர்வுக்கான நிரந்தர பயிற்சி மையங்கள் அமைக்க இடங்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன. நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறும் மாநில அரசின் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை.
இதனால் உச்ச நீதிமன்றம் உத்தரவுபடி நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படை யில் தான் இந்தாண்டு எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடத்த வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டது.தமிழகத்தில், 'நீட் தேர்வுக்கு இந்தாண்டாவது விலக்கு பெற்று விடுவோம்,' என கடைசி வரை உறுதியளித்த அரசால் மாணவர்கள் ஏமாற்றம் தான் அடைந்தனர்.
இக்கல்வியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி அளிப்பதற்காக சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்திற்கு இணையாக, சிறப்புகையேடுகள் தயாரிக்கப்பட்டு விரைவில் வழங்க உள்ளன.மேலும் மாநில அளவில் 67 கல்வி மாவட்டங்களில், நிரந்தர நீட் தேர்வு பயிற்சி மையங்கள் ஏற்படுத்தவும், அதற்காக சொந்த கட்டடம் கட்டவும், கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதன்படி பயிற்சி மையங்கள் கட்டுவதற்கு, இடமும் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.இதுகுறித்து கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில்,"மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப, கல்வி மாவட்டத்தில் ஒன்று அல்லது இரண்டு மையம் ஏற்படுத்த பரிசீலிக்கப்பட்டு வருகிறது. தவிர கல்வி ஒன்றியம் வாரியாக, நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு, மாநிலம் முழுவதும் விரைவில் துவங்கவுள்ளது," என்றார்.
கண்காணிப்பு அவசியம் :
தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் கழக மாநில தலைவர் சாமி சத்யமூர்த்தி கூறியதாவது: நீட் தேர்வு அடிப்படையிலானமருத்துவ மாணவர் சேர்க்கை, இந்தாண்டு அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் வரும் ஆண்டிலாவது மாணவர்களை இத்தேர்வுக்கு தயார்படுத்தும்வகையில், கல்வித்துறை களத்தில் இறங்கியுள்ளது.ஆனால் இதற்கு தகுதியான கல்வியாளர், பயிற்சியாளர்களை நியமிக்க வேண்டும். பெயருக்கு இல்லாமல் சிறப்பாக பயிற்சி அளிக்கப்பட்டால் தான் நம்பிக்கை ஏற்படும். இதற்காக சி.இ.ஓ., டி.இ.ஓ., தலைமையிலான கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தி, கையேடுகள், உபகரணங்கள் வழங்குவதற்காக போதிய நிதி ஒதுக்க வேண்டும், என்றார்.