எங்களைப் போன்ற நல்ல அரசியல்வாதிகளை உருவாக்க வேண்டுமென ஆசிரியர்களுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கைவிடுத்தார்.
பள்ளிக் கல்வித் துறையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கான பணி நியமன உத்தரவுகள் வழங்கும் விழா சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. அதில், ஓ.பன்னீர்செல்வம் பேசியது:பள்ளிக் கல்வித் துறைக்கு ஜெயலலிதாவின் ஆட்சிதான் பொற்காலம். பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களிடம் கல்வி உபகரணங்கள் ஏதும் இல்லை என்ற நிலை உருவாகி விடக்கூடாது என்பதற்காக அவை விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும், சீருடை, சைக்கிள், காலணி, லேப்-டாப் என அனைத்தையும் வழங்கி பள்ளி இடைநிற்றல் இருக்கக் கூடாது என்பதற்காகபல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. மிக உயர்ந்த பணியை மேற்கொண்டு வரும் ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பல்வேறு துறை அறிஞர்களையும், எங்களைப் போன்ற நல்ல அரசியல்வாதிகளையும் உருவாக்கி வருகிறார்கள் என்று துணை முதல்வர் கூறினார்.