மத்திய அரசின் நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் அமைக்க 8 வாரத்திற்குள் அனுமதி அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை உத்தரவிட்டது.
குமரி மகாசபைச் செயலர் ஜெயக்குமார் தாமஸ் என்பவர் தொடர்ந்த பொது நல மனுவில் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் தமிழகத்தை தவிர பிற மாநிலங்களில் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் தமிழக அரசு நவோதயா பள்ளிகள் தொடங்க அனுமதி வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சசிதரன், சுவாமிநாதன் அடங்கிய அமர்வு நவோதயா பள்ளிகளில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகவும் தவறான புரிததால் நவோதயா பள்ளிகளை வேண்டாம் என அரசு கூறக்கூடாது எனவும் தமிழக அரசுக்கு அறிவுறுத்தினார். மேலும் 8 வாரங்களுக்குள் நவோதயா பள்ளிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கவேண்டும் என உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.