'வாகன ஓட்டிகள் ஒரிஜினல் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும்' என அரசு உத்தரவிட்டுள்ளது. விதிகளை மீறி செயல்படுவோரின் ஒரிஜினல் லைசென்ஸ் ரத்து செய்யும் நடவடிக்கைகளும் துவங்கி உள்ளன.
போலீசார் கூறியதாவது: வாகனங்களை அதிக வேகமாக இயக்குதல், அதிக சுமை ஏற்றுதல், கூடுதல் ஆட்களை ஏற்றுதல், சிக்னலில் எல்லை தாண்டுதல், போதையில் வாகனம் ஓட்டுதல், அலைபேசியில் பேசியபடி வாகனம் ஓட்டுதல், ஹெல்மெட், சீட் பெல்ட் அணியாமல் செல்தல் என, ஆறு விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளின் ஒரிஜினல் லைசென்ஸ் ரத்து செய்யப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.