15 பணிகள் குறித்து பள்ளிக்கல்வி அரசு முதன்மைச் செயலாளர் காணொளி வழி ஆய்வு - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Wednesday, 25 October 2017

15 பணிகள் குறித்து பள்ளிக்கல்வி அரசு முதன்மைச் செயலாளர் காணொளி வழி ஆய்வு

பள்ளிக்கல்வி இயக்ககத் திட்டம் குறித்து காணொளிக்காட்சி மூலம் நாளை (25.10.2017) பிற்பகல் 3.00மணி முதல்5.00மணி வரை பள்ளிக்கல்வித்துறை அரசு முதன்மைச் செயலாளர் அவர்களால் ஆய்வு செய்யப்படவுள்ளது.


கலந்துகொள்ள வேண்டிய அலுவலர்கள் :
1.முதன்மைக்கல்விஅலுவலர்கள்
2.மாவட்டக்கல்வி அலுவலர்கள்
3.மாவட்டத்தொடக்ககல்வி அலுவலர்கள்
4.மெட்ரிக்பள்ளி ஆய்வாளர்கள்
5.உதவி மாவட்டத்திட்டஒருங்கிணை ப்பாளர்கள் (அனைவருக்கும் இடைநிலைக்கல்வித் திட்டம்)
6.முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் (மேல்நிலை மற்றும் இடைநிலைக் கல்வி)
7.மாவட்டஉடற்கல்வி ஆய்வாளர்கள்
8.மாவட்ட நாட்டுநலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள்
9.இளஞ் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளர்கள்
10.தமிழ் இலக்கியமன்ற ஒருங்கிணைப்பாளர்கள்
11.பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர்கள்
12.தொன்மைப் பாதுகாப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர்கள்


ஆய்வு செய்யப்பட உள்ளவை :

1.ஒன்றிய அளவில் மாணவர்கட்கு போட்டித் தேர்வுகள் - பயிற்சி மையங்களுக்கான முன்னேற்பாடுகள்.

2.அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்கள் - மாற்றுப்பணியில் நியமித்தல்.

3.டெங்கு நோய் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் செயல்பாடுகள்

4.பருவமழை - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

5.பள்ளிகளில் மாணவர் மருத்துவப் பரிசோதனை

6.அங்கீகாரம் இல்லாத தனியார் பள்ளிகள்  - நடவடிக்கை

7.அரசு உதவி பெறும் பள்ளிகள் தற்காலிக அங்கீகார நிலுவைக் கருத்துருக்கள்.

8.பழுதடைந்த பள்ளிக் கட்டடங்களை அப்புறப்படுத்துதல்

9.அனைவருக்கும் இடைநிலைக்கல்வி –திட்டப்பணிகள்

10.முதன்மைக்கல்வி அலுவலர்கள் /மாவட்டக்கல்வி அலுவலர்கள்–
பள்ளிகள் ஆண்டாய்வு

11.நாட்டுநலப்பணித்திட்டம், தமிழ் இலக்கியமன்றம் உள்ளிட்ட இணைச்செயல்பாடுகள்.

12.விளையாட்டுப் போட்டிகள் /பள்ளிகளில் கூட்டு உடற்பயிற்சி நடைபெறுதல்

13.பள்ளிகளில் நூலகப் புத்தகங்களை மாணவர்கள்பயன்படுத்துதல்.

14.நலத்திட்டப் பொருட்கள் குறித்த நேரத்தில் விரைவாக வழங்குதல்.

15.ஊரகத்திறனாய்வுத்தேர்வு / தேசியவருவாய் வழி மற்றும் திறன் தேர்வு.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot