தகுதி தேர்வில் வெற்றி பெற்ற பட்டதாரிகளுக்கு 25ம் தேதி விழுப்புரம், மதுரையில் சான்று சரிபார்ப்பு - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Sunday 15 October 2017

தகுதி தேர்வில் வெற்றி பெற்ற பட்டதாரிகளுக்கு 25ம் தேதி விழுப்புரம், மதுரையில் சான்று சரிபார்ப்பு

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் கடந்த ஏப்ரல் மாதம் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. அதில் தாள் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற 18769  பட்டதாரிகளுக்கு கடந்த ஜூலை மாதம்  24ம் தேதி முதல் 28ம் தேதி வரை சான்று சரிபார்ப்பு நடந்தது.


இந்த சான்று சரிபார்ப்பின்போது கலந்து  கொள்ள இயலாத 701 பேருக்கும், 2017ம் ஆண்டில் பி.எட் சான்று பெற இயலாத காரணத்தால் பி.எட் சான்று அளிக்காத 535 பேருக்கு மீண்டும் சான்று  சரிபார்ப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட நபர்கள் 25ம் தேதி முதல் 27ம் தேதி  மதுரையில் உள்ள நிர்மலா மகளிர் மேனிலைப் பள்ளியிலும், விழுப்புரம் அரசு மகளிர் மேனிலைப்  பள்ளியிலும் நடக்கும் சான்று சரிபார்ப்பில் கலந்து கொள்ளலாம். இது தவிர, பள்ளிக் கல்வித்துறையில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி  இயக்குநர் நிலை -1 காலிப் பணியிடங்கள் 3375 இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் தேர்ச்சி பெற்ற தகுதியானவர்களுக்கு பணி  நியமனத்துக்கான அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்போது பிற துறைகளில் உள்ள 149 காலிப்பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களுக்கு சென்னை  அசோக் நகர் மகளிர் மேனிலைப் பள்ளியில் 27ம் தேதி காலை 9.30 மணிக்கு நடக்கிறது.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot