தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் கொசு உற்பத்தி தடுப்பு பணியில் ஈடுபடாவிட்டால் கடும் நடவடிக்கை : முதன்மை தலைமை பொறியாளர் எச்சரிக்கை - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Saturday 14 October 2017

தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் கொசு உற்பத்தி தடுப்பு பணியில் ஈடுபடாவிட்டால் கடும் நடவடிக்கை : முதன்மை தலைமை பொறியாளர் எச்சரிக்கை

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு அரசு அலுவலக ஊழியர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அரசு அலுவலக வளாகத்தில்  முறையாக சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்படாததே முக்கிய காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இதைதொடர்ந்து தமிழகம் முழுவதும்  பொதுப்பணித்துறை கட்டுபாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகள், கலெக்டர் அலுவலகம், நீதிமன்றம் உள்ளிட்ட 44 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு  அலுவலகங்களில் கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்க பொதுப்பணித்துறை முதன்ைம தலைமை பொறியாளர் ஜெயசிங்  சுற்றறிக்கை ஒன்ைற அனுப்பியுள்ளார்.

அதன்படி, டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு அலுவலகங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அரசு அலுவலக வளாக கட்டிடத்தில் உள்ள  குப்பைகள், பிளாஸ்டிக் பொருட்கள், மரம், செடிகளில் இருந்து விழுகிற காய்ந்த சருகுகள், குச்சிகள் மற்றும் ஆங்காங்கே தேங்கியுள்ள தண்ணீர்  ஆகியவற்றை அகற்ற வேண்டும்.

இதற்காக கூடுதல் தினக்கூலி பணியாளர்களை நியமிக்க வேண்டும். தேவைப்பட்டால் பொக்லைன் இயந்திரத்தை  பயன்படுத்தி குப்பைகளை அகற்றலாம். இதற்காக, ஆகும் செலவை பராமரிப்பு நிதியில் இருந்து செலவு செய்து கொள்ளலாம். இந்த பணியை உதவி  பொறியாளர், உதவி செயற்பொறியாளர் கண்காணிக்க வேண்டும். இதை செயற்பொறியாளர் ஆய்வு செய்ய வேண்டும்.

இந்த பணியை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். இதை ெபாறியாளர்கள் செய்ய தவறும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்  என்றும் அந்த சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார். இைத தொடர்ந்து பொதுப்பணித்துறை சார்பில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய  மண்டலங்கள் கட்டுபாட்டில் உள்ள அரசு அலுவலகங்களில் சுத்தப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒவ்வொரு நாளும்  பொதுப்பணித்துறை கட்டுபாட்டில் உள்ள அரசு அலுவலகங்கங்களில் இதற்காக தனியாக ஊழியர்களை நியமித்து சுத்தம் செய்யும் பணியில்  ஈடுபடுகின்றனர். வரும் நவம்பர் 8ம் தேதி வரை இப்பணியில் ஈடுபட பொறியாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot