பணிப்பதிவேடு டிஜிட்டல்மயம் இழுபறி; ஆசிரியர்கள் சம்பள உயர்வுக்கு சிக்கல்!!! - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Saturday, 21 October 2017

பணிப்பதிவேடு டிஜிட்டல்மயம் இழுபறி; ஆசிரியர்கள் சம்பள உயர்வுக்கு சிக்கல்!!!

ஆசிரியர்களின் பணிப்பதிவேட்டை, டிஜிட்டல் மயமாக்கும் பணிகள், மெத்தனமாக நடப்பதால், ஊதிய உயர்வு பெறுவதில், சிக்கல் நீடிப்பதாக, தலைமையாசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

ஆசிரியர்கள் உட்பட, அரசு ஊழியர்களுக்கு, ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி, சம்பளம் நிர்ணயித்து வெளியிடப்பட்டது. இதற்கு, ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பிய சூழலில், இச்சம்பளத்தை பெற முடியாத நிலைஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, பள்ளிக்கல்வித்துறையில், ஆசிரியர்களின் பணிப்பதிவேடு உட்பட, பல கல்விசார் ஆவணங்கள், டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகின்றன.

இப்பணிகளுக்காக, மாவட்ட கருவூலத்துறை அலுவலகங்களில், ஆசிரியர்களின் பணிசார்ந்த ஒட்டுமொத்த தகவல்கள் அடங்கிய, பதிவேடுகள் உள்ளன. இதை டிஜிட்டல் மயமாக்கும் பணியை மேற்கொள்வதில் தாமதம் தொடர்கிறது.

இதனால், ஆசிரியர்களின் தகவல்களை தொகுப்பதில், சிக்கல் நீடிப்பதால், புதிய ஊதியத்தை வரையறுக்க முடியாமல், கல்வித்துறை அதிகாரிகள் விழி பிதுங்கியுள்ளனர்.

தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநில நிர்வாகி கூறியதாவது ஆசிரியர்களின் பணிப்பதிவேட்டில் தான், அனுபவம், பணியில் சேர்ந்த நாள், கல்வித்தகுதி, பதவி உயர்வு உள்ளிட்ட, அனைத்து தகவல்களும் இடம்பெற்றிருக்கும்.

இப்பதிவேடு, மாவட்ட கருவூலத்துறை அலுவலகங்களில் உள்ளதால், புதிய ஊதியம் நிர்ணயிப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.கடந்த ஜூன் மாதமே நிர்ணயிக்கப்பட்ட வளரூதியம் கூட, பெற முடியாத நிலை உள்ளது.

இச்சிக்கலுக்கு உடனடியாக, தீர்வு காணப்பட்டால் மட்டுமே, அடுத்த மாதத்தில் இருந்து, நிர்ணயிக்கப்பட்ட புதிய ஊதியம் பெற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot