அரசு விழாக்களுக்கு, பள்ளி மாணவர்களை அழைத்து செல்வதற்கு, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.அரசு விழாக்களில் மாணவர்களை பங்கேற்க உயர்நீதிமன்றம் தடை விதித்தது.
இதுதொடர்பாக, விதிகள் வகுக்கவும் உத்தரவிட்டது. அதன்படி, பள்ளிக் கல்வி இயக்குனர், இளங்கோவன், தொடக்க கல்வி இயக்குனர், கார்மேகம் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.இந்த குழுவினர், இரண்டு கட்டமாக கூடி, குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய அதிகாரிகளுடன் ஆலோசித்து, விதிகளை வகுத்துள்ளனர். மாணவர் பாதுகாப்பு, நலன், விழா நோக்கம், கல்வித் துறை அனுமதி, பெற்றோரின் விருப்பம் போன்ற அம்சங்களை கணக்கில் கொண்டு, விதிகள் உருவாக்கப்பட்டு உள்ளன. இந்த விதிகளை, பொது மக்கள் கருத்துகளை கேட்டு, மாற்றம் செய்யவும், பின், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும், அரசு முடிவு செய்துள்ளது.