பிளஸ் 1 செய்முறை தேர்வுக்கான விதிகள் மற்றும் நடைமுறைகள் அறிவிக்கப்படாததால், மாணவர்களும், ஆசிரியர்களும் குழப்பம் அடைந்துள்ளனர்.
பிளஸ் 2தேர்வை போல், பிளஸ் 2 வகுப்புக்கும், இந்த ஆண்டு முதல், பொதுத் தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.
பிளஸ் 1 தேர்வுக்கான மதிப்பெண் முறையும் மாற்றப்பட்டு உள்ளது. கருத்தியல் என்ற தியரியும், செய்முறையும் உள்ள பாடங்களில், 100 மதிப்பெண்களில், 20 மதிப்பெண், செய்முறை தேர்வுக்கு வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், பொதுத் தேர்வு நடத்தப்படும், பிளஸ் ௨ மற்றும் ௧௦ம் வகுப்புக்கு, செய்முறை தேர்வுக்கான முன்னேற்பாடுகள் நடக்கின்றன. ஆனால், பிளஸ் 1 வகுப்புக்கு செய்முறை தேர்வு எப்போது நடக்கும்; அதன் நடைமுறைகள் என்ன என்ற விபரத்தை, பள்ளிக்கல்வித் துறை இன்னும் அறிவிக்கவில்லை. அதனால், மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
பிளஸ்1 வகுப்புக்கு, இந்த ஆண்டிலேயே செய்முறை தேர்வு உண்டா அல்லது பிளஸ் 2வில் தான் நடத்தப்படுமா என்றும், மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களும் கேள்வி எழுப்பி உள்ளனர். இது குறித்து, பள்ளிக்கல்வித் துறை விளக்கமாக தெரிவிக்க, கோரிக்கை எழுந்துள்ளது.