மாணவர்கள் திறனை மேம்படுத்த மத்திய அரசின் உதவியுடன் 'அடல் லேப்' எனப்படும் கல்விமுறை நடைமுறைப்படுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஈரோட்டில் பேட்டியளித்துள்ளார்.
இந்திய அளவில் நடைபெறும் பொதுத்தேர்வை மாணவர்கள் எதிர்கொள்ள பயிற்சி மையங்கள் 412ல் இருந்து 450 ஆக உயர்த்தப்படும் என்றும், தனியார்நிறுவனங்களின் பங்களிப்புடன் ஒரு வருட காலம் இலவசமாக மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார். மேலும் இப்பயிற்சி மையங்களுக்கான அனுமதி வரும் 24ஆம் தேதி வழங்கப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.