மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 10ம் வகுப்பு, பிளஸ் ௨ பொதுத் தேர்வு எழுத, 'ஆதார்' எண் கட்டாயம் என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு,
இந்த ஆண்டு முதல், பள்ளி அளவிலான தேர்வு ரத்து செய்யப்பட்டு, பொதுத் தேர்வு கட்டாயமாகி உள்ளது. இந்நிலையில், ௧௦ மற்றும் பிளஸ் ௨ வகுப்புகளில், பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களின் விபரங்களை, 'ஆன் - லைனில்' பதிவு செய்யும்படி, பள்ளிகளுக்கு, சி.பி.எஸ்.இ., அறிவுறுத்தி உள்ளது.மிக முக்கியமாக, மாணவர்களின் ஆதார் எண்ணை பதிவு செய்யவேண்டியது கட்டாயம். ஆதார் இல்லாவிட்டால், ஆதார் எடுப்பதற்கான பதிவு எண் குறிப்பிட வேண்டும்; அதுவும் இல்லாவிட்டால், அவர்களின் வங்கிக் கணக்கு விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும். பெற்றோரின் ஆண்டு வருமானம் குறித்து, சுய உறுதிமொழி படிவம் பெற வேண்டும் என, சி.பி.எஸ்.இ., கூறியுள்ளது.