'தீபாவளி பண்டிகைக்கு, ஒரு நாளைக்கு மேல் விடுமுறை எடுக்கக்கூடாது' என, ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும், நாளை தீபாவளி கொண்டாடப்படுகிறது.
இதற்காக, வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் உள்ளவர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு குடும்பத்துடன்செல்கின்றனர். ஆசிரியர்களும் விருப்பதிற்கேற்ப, இன்று துவங்கி ஞாயிறு வரை, விடுமுறை கேட்டு, தலைமை ஆசிரியர்களிடம் விண்ணப்பித்து உள்ளனர்.
இந்நிலையில்,ஆசிரியர்களுக்கு, தீபாவளிக்கு, ஒரு நாளைக்கு மேல் விடுமுறை வழங்க வேண்டாம் என, தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். போராட்டத்திற்காக விடுப்பு எடுத்த ஆசிரியர்கள், அவற்றை சரி செய்ய, விடுமுறை நாட்களில் பணிக்கு வந்து, பாடம் எடுக்க வேண்டும். மாறாக, தீபாவளியின் பெயரில், கூடுதலாக விடுப்பு எடுத்து, பணிகள் பாதிக்கும் வகையில், ஆசிரியர்கள் நடந்து கொள்ளக்கூடாது என, தலைமைஆசிரியர்களும், மாவட்ட கல்வி அதிகாரிகளும் எச்சரித்துள்ளனர்.