'வங்கக் கடலில் வரும், 7, 15 ஆகிய தேதிகளில், இரண்டு புயல்கள் உருவாகி, தமிழகத்தை தாக்கும்' என, சமூக வலைதளங்களில் பரவிய தகவலால், மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.
தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில், 2016ல், வடகிழக்கு பருமழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால், தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகள், கடும் வறட்சியை சந்திக்கும் நிலை ஏற்பட்டது. ஆனால் இந்தாண்டு, தென் மேற்கு பருவ மழை, இயல்பை விட கூடுதலாக பெய்து, வறட்சியை போக்கியது.இந்நிலையில், வரவிருக்கும் வடகிழக்கு பருவ மழை, எந்த அளவுக்கு பெய்யும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்ட கணிப்பில், தமிழகத்தில், கூடுதல் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.இதை அடிப்படையாக வைத்து,சில தனியார் வானிலை ஆராய்ச்சி மையங்கள் கூறியதாக, சமூக வலைதளங்களில், 'தமிழகத்தை தாக்க, இரண்டு புயல் வருகிறது' என்ற தகவல் பரவி வருகிறது. அதன்படி, அக்., 7 -11 மற்றும், 15 - 20 தேதிகளுக்கு உட்பட்ட காலத்தில், வங்கக் கடலில் இரண்டு புயல்கள் உருவாகும் என்றும், அவை தமிழகத்தை தாக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே, 2016ல், 'வார்தா' புயலை சந்தித்த சென்னை மக்கள், இதனால் பீதி அடைந்துள்ளனர்.இது குறித்து, இந்திய வானிலை ஆராய்ச்சி அதிகாரிகள் கூறுகையில், 'இரண்டு புயல்கள் உருவாக உள்ளதாக, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் உண்மை அல்ல. இதுபோன்ற கணிப்புகள் எதையும், நாங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை' என்றனர்.
தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில், வடகிழக்கு பருவ மழைக் காலங்களில், வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தான், மழை அதிகரிக்கும். காற்றழுத்த தாழ்வு நிலை, புயலாக மாறாமல் தொடரும்போது மட்டுமே, அதிகபட்ச மழை கிடைக்கும். அது, புயலாக வலுவடைந்து, கரையை கடந்துவிட்டால், மழை அளவு குறைந்து விடும். ஆனால், சூறாவளி காற்றால் சேதம் ஏற்படுவது மட்டுமே நிகழும். உதாரணமாக,2015ல், புயல் இல்லாததால் அதிக மழை பெய்தது; 2016ல், வார்தா புயல் வந்தபோது, மழை அளவு குறைந்தது. இவ்வாறு அவர் கூறினார்.