1994-ம் ஆண்டு முதல் பிளஸ் 2, எஸ்எஸ்எல்சியில் தேர்வானவர்களின் 1 கோடி மதிப்பெண் சான்றிதழ்கள் டிஜிட்டல்மயம்: உண்மைத்தன்மையை ஆய்வு செய்வது எளிதாகியது - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Wednesday 15 November 2017

1994-ம் ஆண்டு முதல் பிளஸ் 2, எஸ்எஸ்எல்சியில் தேர்வானவர்களின் 1 கோடி மதிப்பெண் சான்றிதழ்கள் டிஜிட்டல்மயம்: உண்மைத்தன்மையை ஆய்வு செய்வது எளிதாகியது

தமிழகத்தில் கடந்த 1994 முதல் இந்த ஆண்டு வரை எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 முடித்த சுமார் ஒரு கோடி மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களை அரசு தேர்வுத்துறை டிஜிட்டல்மயமாக்கி இருக்கிறது.
இதன்மூலம் மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மைத்தன்மையை ஆன்லைன் மூலமாக ஒரு நொடியில் ஆய்வுசெய்துவிட முடியும்.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அமைச்சுப்பணியாளர்களின் மதிப்பெண்சான்றிதழ்களின் உண்மைத்தன்மையை (Genuineness) ஆய்வு செய்யும் பணியை அரசுதேர்வுத்துறை மேற்கொண்டு வருகிறது. அரசு பணியில் சேரும் ஆசிரியர்களும், ஊழியர்களும்மதிப்பெண் சான்றிதழின் உண்மைத்தன்மை கண்டறியப்பட்ட பின்னரே அவர்களுக்கு தகுதிகாண் பருவம் முடிப்பது, பணிவரையறை செய்வது உள்ளிட்ட பணிகள் இறுதி செய்யப்படும்.இதுவரையில், அரசு பணியில் சேருவோரின் 10-ம்வகுப்பு மற்றும் பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் சம்பந்தப்பட்ட துறைகள் அல்லது கல்வித்துறை அலுவலர்கள் மூலமாக தேர்வுத்துறைக்கு அனுப்பப்பட்டு அங்குள்ள பணியாளர்கள் பழைய ஆவணங்களை தேடிப்பிடித்து சான்றிதழ் மற்றும் மதிப்பெண் விவரங்களை சரிபார்ப்பார்கள். அதன் பின்னரே மதிப்பெண் சான்றிதழ்களுக்கு உண்மைத்தன்மை சான்று அளிக்கப்படும்.

அண்மைக் கால சான்றிதழ்களை தேர்வுத்துறையினர் விரைவில் கண்டறிய முடியும். ஆனால், 20 ஆண்டுகளுக்கு முன்பு படித்தவர்களாக இருப்பின் பழைய ஆவணங்களை தேடிப்பிடிப்பதே மிகப்பெரிய பணியாக இருக்கும். இதன்மூலம் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உண்மைத்தன்மை சான்று கிடைக்க காலதாமதமாகும். இதன் காரணமாக, அவர்கள் தகுதிகாண் பருவம் முடிப்பதும், பணிவரன்முறைபெறுவதிலும் தாமதம் ஏற்படும். இதனால், அவர்கள் பல்வேறு பலன்கள் பெறுவதும் பாதிக்கப்படலாம்.

காலதாமதத்துக்கு முற்றுப்புள்ளி

இந்தப் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அரசு தேர்வுத்துறை மதிப்பெண் சான்றிதழ்களை டிஜிட்டல்மயமாக்கிஉள்ளது. அதன்படி, கடந்த 1994 முதல் இந்த ஆண்டு வரையில் ஒரு கோடி மதிப்பெண் சான்றிதழ்கள் டிஜிட்டல்மயமாக்கப்பட்டு இருப்பதாகவும் அரசு தேர்வுத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.அந்த அதிகாரி மேலும் கூறும்போது,"டிஜிட்டல்மயமாக்கப்பட்ட சான்றிதழ்களை ஆன்லைனில் தெரிந்துகொள்ளும் வகையில் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அரசுத் துறைகளுக்கும், காவல் துறைக்கும் பிரத்யேக யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டு (ரகசிய எண்) வழங்கப்பட்டுள்ளது.அதன்மூலம் ஆசிரியர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மைத்தன்மையை ஆன்லைனிலையே ஒருநொடியில் ஆய்வு செய்துவிட முடியும். மேலும், இந்த ஆண்டு எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 முடித்தமாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களை டிஜிட்டல் லாக்கர் மூலம் ஆன்லைனில் எப்போதுவேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்" என்றார்.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot