தொலைதூர பிஎட் படிப்புக்குநவ. 30 வரை விண்ணப்பிக்கலாம்: திறந்தநிலை பல்கலை. அறிவிப்பு - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Sunday 5 November 2017

தொலைதூர பிஎட் படிப்புக்குநவ. 30 வரை விண்ணப்பிக்கலாம்: திறந்தநிலை பல்கலை. அறிவிப்பு

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி பிஎட் படிப்புகளுக்கு (பொது மற்றும் சிறப்பு கல்வி) விண்ணப்பிப் பதற்கான கடைசி நாள் நவம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பேராசிரியர் எஸ். விஜயன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

2018-ம் ஆண்டு பிஎட் (பொது), பிஎட் (சிறப்புகல்வி) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. பிஎட் (பொது) படிப்பில் ஆசிரியர் பட்டயப் படிப்புடன் (இடைநிலை ஆசிரியர் பயிற்சி) இளங்கலை பட்டமும் பெற்றிருக்க வேண்டும். தற்போது ஆசிரியராக பணிபுரிந்து வர வேண்டும். பிஎட் (சிறப்பு கல்வி) படிப்புக்கு விண்ணப்பிப்பவர்கள் இந்திய மறுவாழ்வுக் கவுன்சில் விதிமுறைகளின்படி தகுதி பெற்றிருக்க வேண்டும்.மேற்கண்ட இரு படிப்பு களுக்கும் விண்ணப்பிக்க கடைசி நாள் நவம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப படிவம், விளக்கக் கையேட்டை பல்கலைக்கழகத்தின் இணைய தளத்தில் (www.tnou.ac.in) பதி விறக்கம் செய்துகொள்ளலாம். கூடுதல் விவரங்கள் அறிய 044-24306600, 24306617 ஆகிய தொலைபேசிஎண்களில் தொடர்புகொள்ளலாம். இணையதளத்திலும் விவரங்கள் அறியலாம்.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot