அறிவியல் சம்பந்தப்பட்ட படிப்புகளுக்கான ‘நெட்’ தகுதித் தேர்வை சிஎஸ்ஐஆர் அமைப்பு ஆண்டுக்கு 2 தடவை (ஜூன், டிசம்பர்) நடத்தி வருகிறது. அந்த வகையில், கடந்த ஜூன் 18-ம் தேதி சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு நடத்தப்பட்டது.
5 மாதங்களாகியும் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை.சிஎஸ்ஐஆர் மனிதவள மேம்பாட்டுப்பிரிவு துணைச் செயலாளர் (தேர்வுகள்) வெளியிட்டுள்ளஅறிவிப்பில், “நெட் தேர்வு குறித்த வழக்கு பஞ்சாப், ஹரியாணா உயர் நீதி்மன்றத்தில் நிலுவையில் இருப்பதால் தேர்வு முடிவை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சட்டப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டதும் முடிவுகள் வெளியிடப்படும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.