சி.பி.எஸ்.இ., பள்ளிகளின் தேசிய : மதுரையில் இன்று துவக்கம் மாநாடு - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Wednesday 1 November 2017

சி.பி.எஸ்.இ., பள்ளிகளின் தேசிய : மதுரையில் இன்று துவக்கம் மாநாடு

மதுரையில் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சார்பில் 23வது தேசிய சகோதயா மாநாடு இன்று (நவ.,2) துவங்குகிறது.இதுகுறித்து மாநாட்டு தலைவர் அருணா விஸ்வேஸ்வரன்(முதல்வர், அத்யப்பனா பள்ளி, மதுரை), செயலாளர் ஹம்ச பிரியா (முதல்வர், மகாத்மா பள்ளி, மதுரை) கூறியதாவது:
சி.பி.எஸ்.இ., பள்ளிகளின் தரம் மேம்பாடு, கற்பித்தல் முறையில் புதிய மாற்றங்கள் உட்பட பல்வேறு வளர்ச்சிகள் மற்றும் தேவைகள் குறித்துவிவாதிக்க ஆண்டுதோறும் சகோதாயா சார்பில் தேசிய மாநாடு நடத்தப்படுகிறது.முதன் முறையாக இந்தாண்டு மதுரை சகோதயா சார்பில் ராஜாமுத்தையா மன்றத்தில் 'தரமான கல்வி' என்ற தலைப்பில் நடக்கிறது.இதில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சி.பி.எஸ்.இ., பள்ளி முதல்வர்கள், தாளாளர்கள், செயலாளர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.

சென்னை மற்றும் டில்லி சி.பி.எஸ்.இ.,இயக்குனர், கூடுதல் இயக்குனர்கள் உட்பட அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.முதல் நாள் நிகழ்ச்சியை முன்னாள் மத்திய அமைச்சரும், திருவள்ளுவர் இளம் மாணவர் பேரவை தலைவருமான தருண் விஜய் துவக்கி வைக்கிறார். மதுரை கலெக்டர் வீரராகவராவ் பங்கேற்கின்றனர். இரண்டு நாள் நிகழ்ச்சிகளிலும் அறிவியல், தொழில் நுட்பம், மருத்துவம், சுற்றுச்சூழல், கலை, பண்பாடு, இசை, யோகா, ஆன்மிகம், சித்தா உட்பட பல்வேறு தலைப்புகளில் 19 நிபுணர்கள் பேசுகின்றனர்.

இன்று மாலை 'மதுரையின் கதை' என்ற தலைப்பில் கடம்பவனம் முதல் மீனாட்சி திருக்கல்யாணம், ஆற்றில் அழகர் இறங்கும் வைபவம் வரை 'பழங்கால மதுரை' மற்றும் திருவள்ளுவர் முதல் எம்.எஸ்.சுப்புலட்சுமி வரை சாதனைகளையாளர்களை விவரிக்கும் 'மார்டன் மதுரை' என்ற தலைப்பிலும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. முதல் முறையாக ஆங்கில வில்லுப்பாட்டு கச்சேரிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மாநாட்டில் மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.,) குறித்த தகவல்கள், பள்ளிகள், பாடத் திட்டங்கள் உட்பட கல்வி தொடர்பாக 42 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 11 மாவட்டங்களில் உள்ள 75 சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சார்பில் இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன, என்றனர்.பேட்டியின்போது மாநாட்டு நிர்வாகிகள் பரமகல்யாணி, திலகா, சுப்புலட்சுமி, தீபலட்சுமி, முத்துக்கிருஷ்ணன், முருகதாஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.

தினமலர் 'பட்டம்' கிடைக்கும்

இந்நிகழ்ச்சிக்கான 'பிரின்ட் பார்ட்னராக' 'பட்டம்' தினமலர் மாணவர் பதிப்பு இணைந்துள்ளது. மாநாட்டில் 'பட்டம்' அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கில் பள்ளி மாணவர்கள் எண்ணங்களை வண்ணமயமாக்கும் தினமலர் மாணவர் பதிப்பு கிடைக்கும். இந்த இதழை பள்ளிகளில் பெற அரங்கில் தொடர்பு கொள்ளலாம்.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot