GST வரி விதிப்பில் மாற்றம்: விலை குறையும் 200 பொருட்கள் என்னென்ன? - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Wednesday 15 November 2017

GST வரி விதிப்பில் மாற்றம்: விலை குறையும் 200 பொருட்கள் என்னென்ன?

ஜிஎஸ்டி வரி விதிப்பில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதை அடுத்து, அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் உட்பட சுமார் 200 பொருட்களின் விலை இன்று முதல் குறைகிறது.


ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை மாற்றத்தால் பயன்பெறுவோரில் நுகர்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் முதல் இடத்தில் உள்ளன. அடுத்து, சிறு குறு தொழில்கள், உணவகங்கள், ஹோட்டல்களும் இதன் மூலம் பயனடைகின்றன.

கடந்த வாரம் குவாஹாட்டியில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 28% வரி விதிப்பில் இருந்த 180 பொருட்கள் உட்பட சுமார் 210 பொருட்களின் வரி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களான சாக்லேட், செரிவூட்டப்பட்ட பால், மயோன்னைஸ் சாஸ், மசாலா கூழ், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, சர்க்கரைக் கட்டிகள், பாஸ்தா, பர்ஃபி, இட்லி-தோசை மாவு, உறையவைக்கப்பட்ட மீன், சீவிங்கம், துணி துவைக்கும் சோப்புப் பவுடர், ஷேவிங் க்ரீம், பிளேடு, ஷாம்பு, டியோட்ரண்ட், அழகு சாதனப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களின் விலை இன்று முதல் குறைகிறது.

அதேப்போல, வெட் கிரைண்டர்கள், கவச வாகனங்கள் ஆகியவற்றின் மீதான ஜிஎஸ்டி 28 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 6 பொருள்கள் மீதான ஜிஎஸ்டி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், 8 பொருள்கள் மீதான ஜிஎஸ்டி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகவும், 6 பொருள்கள் மீதான ஜிஎஸ்டி 5 சதவீதத்தில் இருந்து பூஜ்யம் சதவீதமாகவும் (வரி இல்லை) குறைக்கப்பட்டுள்ளது

ஜிஎஸ்டி கவுன்சில் குழு முடிவின்படி, 178 பொருள்கள் மீதான வரி குறைக்கப்பட்டதையடுத்து, 28 சதவீத வரிகள் விதிக்கப்பட்ட பொருள்களின் பட்டியலில் இருக்கும் பொருள்களின் எண்ணிக்கை 50-ஆக குறைந்துள்ளது. அந்தப் பட்டியலில் பெயிண்ட், பர்ப்யூம்ஸ், ஏசி இயந்திரம், துணி துவைக்கும் இயந்திரம், குளிர்பதன பெட்டி, வாக்குவம் கிளீனர், கார்கள், 2 சக்கர வாகனங்கள், விமானம், படகு போன்ற ஆடம்பரப் பொருள்களும், பான் மசாலா, சிகரெட்டுகள், புகையிலை தயாரிப்பு பொருள்கள் போன்ற மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பொருள்களுமே தற்போது உள்ளன.

28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ள பொருள்களில், காபி, மார்பிள், கிரானைட், கஸ்டர்டு பவுடர், பற்பசை, பாலிஷ், திரவியங்கள், கழிப்பறை சார்ந்த பொருள், தோல் ஆடை, சிகையலங்காரத்துக்கு பயன்படுத்தப்படும் விக், குக்கர், ஸ்டவ், சவரக்கத்தி, வெட்டுக்கருவிகள், வாட்டர் ஹீட்டர், பேட்டரிகள், மூக்கு கண்ணாடி, கை கெடிகாரம், மெத்தை, வயர், கேபிள், மரப்பெட்டி, சூட்கேஸ், ஹேர் க்ரீம், ஹேர் டை, முகப்பூச்சு, காற்றாடி, விளக்கு, ரப்பர் ட்யூப், மைக்ரோ ஸ்கோப் உள்ளிட்டவை முக்கியமானவை.

டயாபடிக் உணவு, பிரிண்டிங் மை, கைப்பைகள், தொப்பிகள், கண்ணாடி பிரேம்கள், மூங்கில்/பிரம்பாலான மர சாமான்கள் மீதான ஜிஎஸ்டி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

உருளைக் கிழங்கு மாவு, சட்னி பவுடர் உள்ளிட்டவை மீதான ஜிஎஸ்டி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

உலர்த்தப்பட்டகாய்கறிகள், தேங்காய் ஓடு, மீன் உள்ளிட்டவை மீதான ஜிஎஸ்டி 5 சதவீதத்தில் இருந்து பூஜ்யமாக குறைக்கப்பட்டுள்ளது.

இட்லி தோசை மாவு, கயிறு, மீன் வலை, ஆடை, உலர்ந்த தேங்காய் உள்ளிட்டவை மீதான ஜிஎஸ்டி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

0% உலர்த்தப்பட்ட காய்கறிகள், தேங்காய் ஓடு, மீன்
5% ஏசி மற்றும் ஏசி அல்லாத உணவகங்கள், சட்னி பவுடர்
12% ரீபைண்ட், சர்க்கரை, டயாபடிக் உணவு, தொப்பிகள், கைப்பைகள்
18% சாக்லேட்டுகள், காபி, மார்பிள், கிரானைட், குக்கர்கள், கை கெடிகாரம், ஷாம்பூ, காற்றாடிகள்
28% பான் மசாலா, சிகரெட்டுகள், புகையிலை பொருள்கள், சிமெண்ட், பெயிண்ட், ஏசி, வாஷிங் மெஷின், கார்கள், 2 சக்கர வாகனங்கள் என்ற அளவில் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் சில பொருட்களாகும்.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot