TNPSC CCSE - IV தேர்வுக்கு தயாராவது எப்படி? - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Friday 24 November 2017

TNPSC CCSE - IV தேர்வுக்கு தயாராவது எப்படி?

கடினமாக படிக்க வேண்டும் என்பதை விட, சரியாக திட்டமிட்டு படித்தாலே வெற்றி பெறலாம். முதன்முதலாக தேர்வு எழுதுவோர், 6 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உள்ள தமிழ், அறிவியல் மற்றும் சமூகவியல் புத்தகங்களை முழுமையாக படிக்க வேண்டும்.
பொருளாதாரம் குறித்த கேள்விகளுக்கு பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பொருளாதார பாடங்களே போதும்.தேர்வுகளில் தத்துவஇயல், மனத்திறன் தொடர்பான *கணிதக்* கேள்விகள் கேட்கப்படுகின்றன. இப்பகுதிக்கு ஆழமாக படிக்க வேண்டியதில்லை. சந்தையில் கிடைக்கும் வழிகாட்டி நூல்களை புரட்டினாலே போதும்.*நடப்பு நிகழ்வுகள்* குறித்த வினாக்களுக்கு, முக்கியத்துவம் தரப்படும் என தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதற்கு விடையளிக்க, தினமும்*செய்தித்தாள்களைப்* படித்து, குறிப்பு எடுக்க வேண்டும். முக்கிய செய்தி, சிறப்பு கட்டுரை, தலையங்கம் ஆகியவற்றை சேகரித்து வைக்க வேண்டும்.*அறிவியல்* பாடங்களைப் படிக்கும் போது, அதன் நடைமுறை, பயன்பாடுகளை தெரிந்து கொள்ள வேண்டும். *கம்ப்யு ட்டர் சயின்சில்* அடிப்படையாக 2 கேள்விகள் இருக்கும். இதற்கு கம்ப்யு ட்டர் குறித்த, இயல்பான அறிவே போதும்.பாடவாரியாக அட்டவணை தயார் செய்ய வேண்டும். தேர்வுக்கு முன் குறைந்தபட்சம், *10 மாதிரி தேர்வுகளை* எழுத வேண்டும். முந்தைய வினாத்தாளை படிப்பதும் அவசியம்.

முக்கிய குறிப்புகள்:தவறான விடைகளுக்கு மதிப்பெண் குறைக்கும் முறை இல்லாத காரணத்தால் 200 கேள்விகளுக்கும் விடையளிப்பதே சிறந்தது.குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் 200 கேள்விகளுக்கும் விடையளிப்பதற்கு பயிற்சி மிக அவசியம். ஆகவே தினமும் இரண்டு முந்தைய வருட வினாத்தாள்களை கொண்டு பயிற்சி பெறுதல் சிறந்தது.அடிப்படையாக இந்த மூன்றும் முக்கியம்...!ஒரு போட்டித் தேர்வுக்கு தயாராகுவோர், மொழியறிவு நிச்சயமாக பெற்றிருக்க வேண்டும். அதாவது, தாய்மொழி, ஆங்கிலம் மிக அவசியம். ஏனென்றால் பெரும்பாலும் போட்டித் தேர்வுகளில் தாய்மொழி மற்றும் ஆங்கிலத்தில் தான் கேள்விகள் கேட்கப்படும்.குறிப்பாக மொழிப் பாடத்துக்கு அதிக மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. அதற்குப் பிறகு, பொது அறிவு மிக மிக முக்கியம்.

மூன்றாவதாக அடிப்படை கணித அறிவு முக்கியம். இந்த மூன்றும் இருந்தாலே யார் வேண்டுமானாலும் குரூப் தேர்வுகளில் எளிதாக வெற்றி பெறலாம்.பொது அறிவைப் பொறுத்தவரை போட்டித் தேர்வு அறிவிப்பு வெளியான உடன் படிக்கத் தொடங்குவது எந்த விதத்திலும் பயன் அளிக்காது. பொது அறிவு குறித்த தேடல்கள் எப்போதும் உங்களுக்குள் இருக்க வேண்டும். இதற்கென தினமும் ஒரு மணி நேரமாவது படிப்பிற்காக ஒதுக்க வேண்டும்.பொருளாதார சுழ்நிலையோ, சமூகக் காரணியோ உங்கள் முயற்சியைதடுக்க முடியாது. உங்கள் முயற்சி மட்டுமே உங்களுக்கான வெற்றியைத் தரும். நீங்கள் வெற்றி பெற்றால், அதற்கு பல பேர் காரணமாக இருக்கலாம் தோல்வியுற்றால் நீங்கள் மட்டும்தான் காரணம் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.

வினாத்தாள் பற்றிய விவரங்கள்:

பொதுத் தமிழ் அல்லது  பொது ஆங்கிலம் பகுதியில் கேட்கப்படும் வினாக்கள் : 100 வினாக்கள்பொது அறிவு பாடப்பகுதியில், எந்தப் பகுதியில் எத்தனை வினாக்கள் கேட்கப்படும் என்று உங்களுக்காக தொகுக்கப்பட்டுள்ளது.

அறிந்து கொள்ளுங்கள்!!!

1. வரலாறு - 16 வினாக்கள்

2.பொருளாதாரம் - 09 வினாக்கள்

3. அரசியல் அறிவியல் - 08 வினாக்கள்

4. புவியியல் - 06 வினாக்கள்

5. இயற்பியல் - 04 வினாக்கள்

6. வேதியியல் - 03 வினாக்கள்

7.தாவரவியல் - 02 வினாக்கள்

8. விலங்கியல் - 06 வினாக்கள்

9. முக்கிய தினங்கள், திட்டங்கள்* - *03 வினாக்கள்

10. கணிதம் - 25 வினாக்கள்

11. நடப்பு நிகழ்வுகள் - 18 வினாக்கள்*

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot