ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுகளுக்கான வினா-விடை - 12 - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Thursday 14 December 2017

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுகளுக்கான வினா-விடை - 12

* திணை இருவகைப்படும்.
* பெயர்ச்சொற்களை உயர்திணைப்பெயர், அஃறிணைப் எனப் பிரிக்கிறோம்.
* ஆண்பால் பெயர்ச்சொற்கள் ஆண்பால் வினை முடிவையே பெறும்.
* எண் இரு வகைப்படும். இடம் மூன்று வகைப்படும்.

* மொழியின் அடிப்படை உறுப்புகள் - எழுத்து, சொல், சொற்றொடர்
* எல்லா எழுத்துக்களுக்கும் அடிப்படையானது ஒலி
* திணை என்பது ஒழுக்கம். திணையின் உட்பிரிவு பால்
* எழுத்தினால் அமைக்கப்பட்டு, பொருளை அறிந்து கொள்வதற்கு கருவியாக இருக்கும் ஒலியே சொல் ஆகும்.
* இலக்கண வகையில் சொற்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம்.
* இலக்கிய வகையில் சொற்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம்.


* பெயர்சொல் ஆறு வகைப்படும்.
* பொருளின் செயலை, இயக்கத்தை உணர்த்தும் சொல் வினைச்சொல்
* வினைச்சொல் காலம் காட்டும், வேற்றுமை உருபை ஏற்காது
* பெயர்ச்சொல், வினைச்சொற்களை இடமாகக் கொண்டு வரும் சொற்கள் இடைச்சொல் (இடை-இடம்)
* இடைச்சொற்கள் தனியாக வந்தால் பொருள் தராது.
* பெயர்ச் சொல், வினைச்சொற்களைச் சார்ந்து அவற்றின் குணத்தை உணர்த்தி வரும் சொற்கள் உரிச்சொற்கள் எனப்படும்.
* உரிச்சொற்கள் இருவகைப்படும்.
* கடி என்பது பலகுணம் தழுவிய ஓர் உரிச்சொல்
* இயல்பால் அமைந்த தமிழ்ச்சொல் இயற்சொல் எனப்படும்.
* இயற்சொல் இரு வகைப்படும்.

* பசு, காற்று, செடி, குடம் - பெயர் இயற்சொல் சிரித்தான், பறந்தது, மேயந்தன - வினை இயற்சொல்
* கற்றவர்கள் மட்டுமே பொருள் அறியும் வகையில் அமைந்த சொற்கள் திரிசொல் எனப்படும்.
* திரிசொல் இரண்டு வகைப்படும்.
* வடமொழிச்சொல் திரிந்தும், திரியாமலும் தமிழ் மொழியில் வந்து வழங்குமானால் அவை வடசொல் எனப்படும்.
* தமிழ்நாட்டைச் சூழ்ந்துள்ள பிற பகுதிகளிலிருந்து தமிழில் வழங்கும் சொல் திசைச்சொற்கள்
* எந்தக் காரணமும் கருதாமல் ஒரு பொருளுக்குக் குறியீடாக இட்ட பெயரே இடுகுறிப் பெயர்.
* காரணம் கருதி இடப்பட்ட பெயர்கள் காரணப் பெயர்கள்
* காடு என்பது இடுகுறிப் பொதுப்பெயர்
* பனை - என்பது இடுகுறிச் சிறப்புப் பெயர்
* பறவை - காரணப் பொதுப் பெயர்

* மரங்கொத்தி - காரணச் சிறப்பு பெயர்
* செயல் முடிந்ததைக் குறிக்கும் சொல் - வினைமுற்று
* வினைமுற்று காலம் காட்டும். திணை ,பால், எண், இடம் ஆகியவற்றை உணர்த்தும்(காட்டும்).
* முற்று பெறாத வினைச்சொல் எச்சம் எனப்படும்.
* முற்றுப் பெறாத வினைச்சொல் பெயரைக் கொண்டு முடிந்தால் பெயரெச்சம், வினையைக் கொண்டு முடிந்தால் வினையெச்சம்.
* பெயர்ச்சொல்லின் பொருள் வேறுபடுவதை வேற்றுமை என்பர். வேற்றுமை எட்டு வகைப்படும்.
* எழுவாய்(இயல்பான பெயர்) பயனிலைக் கொண்டு முடிவது முதல் வேற்றுமை (அ) எழுவாய் வேற்றுமை.
* முதல் வேற்றுமை, வினை, பெயர், வினா ஆகியவற்றைப் பயனிலையாகக் கொண்டு முடியும்.
* கர்ணன் வந்தான் - வினைப்பயனிலை

* அவன் இராமன் - பெயர்ப் பயனிலை
* அவன் யார்? - வினாப் பயனிலை
* முதல் வேற்றுமைக்கு உருபு இல்லை.
* பெயர்ச் சொல்லினது பொருளைச் செயப்படு பொருளாக வேறுபடுத்துவது இரண்டாம் வேற்றுமை ஆகும்.
* இரண்டாம் வேற்றுமையை செயப்படுபொருள் வேற்றுமை என்றும் வழங்குவர். * இதன் உருபு "ஐ" ஆகும்.
* இரண்டாம் வேற்றுமை உணர்த்தும் பொருள்கள் ஆறு.
* மூன்றாம் வேற்றுமையின் உருபு  ஆல், ஆன், ஒரு, ஓடு
* மூன்றாம் வேற்றுமை தாம் ஏற்ற பெயர்ப்பொருளை கருவி, கருத்தா  உடனிகழ்ச்சிப் பொருளாக வேறுபடுத்தும்.

* கருவிப் பொருள் இரு வகைப்படும். கருத்தாப் பொருள் இரு வகைப்படும்.
* நாற்காலி தச்சனால் செய்யப்பட்டது என்பது இயற்றுதல் கருத்தா.
* கோவில் அரசனால் கட்டப்பட்டது என்பது ஏவுதல் கருத்தா
* எழுவாயின் செயலுடன் பிறிதொன்றனது செயலும் உடன் நிகர்வது
* உடனிகழ்ச்சி பொருள் (தாயோடு குழந்தை சென்றது)
* நான்காம் வேற்றுமையின் உருபு - "கு" ஆகும்
* ஐந்தாம் வேற்றுமையின் உருபுகள் - இல், இன் என்பன.
* ஆறாம் வேற்றுமையின் உருபு - "அது"
* ஏழாம் வேற்றுமைக்குக் கண், உள், மேல், கீழ் என்பன உருபுகள் ஆகும்.
* எட்டாம் வேற்றுமைக்கு உருபு இல்லை இதனை விளிவேற்றுமை என்பர்.

* ஒரு சொல்லின் முதல், இடை, கடை எழுத்து மாறுபட்டாலும் பொருள் மாறுபடாது இருப்பது போலி.
* போலி மூன்று வகைப்படும்.
* முதல் போலி - மஞ்சு - மைஞ்சு, மயல் - மையம்
* இடைப்போலி - முரசு - முரைசு, அரசியல் - அரைசியல்
* கடைப்போலி - அறம் - அறன், பந்தல் - பந்தர்
* முற்றுப்போலி - அஞ்சு - ஐந்து
* எழுத்து தனித்தோ, தொடர்ந்தோ பொருள் தருமானால் அது சொல்
* பதம், கிளவி, மொழி என்பன சொல்லின் வேறு பெயர்கள்.
* ஓரெழுத்து தனித்து தொடர்ந்தோ பொருள் தருமானால் அது சொல்.


தொடரும்...

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot