ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுகளுக்கான வினா-விடை - 14 - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Tuesday 19 December 2017

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுகளுக்கான வினா-விடை - 14

* இரண்டு (அ) பல சொற்கள் இணைவதற்குப் புணர்ச்சி என்று பெயர்
* நிலை மொழியும், வரு மொழியும் சேரும்போது எவ்வித மாற்றமும் இல்லாமல் புணர்வது இயல்புப் புணர்ச்சி

* பொன்+வளையல் - பொன்- நிலைமொழி, வளையல் - வருமொழி, நிலைமொழியில் 'ன்' - மெய்யீரு.
* பனை + மரம் - இதில் நிலைமொழியில் உயிரீறு உள்ளது.
* வருமொழியின் முதல் எழுத்து உயிர்மெய்யாக இருந்தால் மெய்முதல் எனச் சொல்ல வேண்டும். (பொன்+குடம்)
* வருமொழியின் முதல் எழுத்து உயிராக இருந்தால் உயிர் முதல் எனச் சொல்ல வேண்டும் (கண்+அழகு)
* நிலைமொழியும், வருமொழியும் சேரும்போது மாற்றங்கள் ஏற்படுமானால் அதனை விகாரப் புணர்ச்சி என்பர்.
* விகாரப் புணர்ச்சி மூவகைப்படும்.
* தமிழ் +மண் என்பது இயல்புப் புணர்ச்சி. பொன்+குடம் என்பது தோன்றல், வாழை+தோட்டம் என்பது விகாரப் புணர்ச்சி
* இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்.

* இ,ஈ,ஐ ஆகிய முன் உயிர்வரின் ய் தோன்றும், அ, ஆ, உ, ஊ, ஓ முன் உயிர்வரின் வ் தோன்றும். ஏ முன் உயிர்வரின் வ், ய் இரண்டும் தோன்றும்.
கிளி + அழகு = கிளியழகு, தீ+எரிகிறது = தீயெரிகிறது. பனை+ஓலை = பனையோலை
குண+அழகி = குணவழகி, பலா+இலை = பலாவிலை, பூ+அழகி =.பூவழகி, கோ + இல் = கோவில், தே+ஆரம் = தேவாரம், சே+அடி = சேவடி, சேயடி.
* உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்வே (மலர்+அடி = மலரடி)
* தனிக்குறில் முன்று ஒற்று உயிர்வரின் இரட்டும் (கண்+அழகு = கண்ணழகு)
* எழுத்துக்கள் பிறப்பதற்கு அடிப்படைக் காரணமாக இருப்பவை ஒலியணுக்கள்.
* எழுத்துக்கள் தோன்றுகின்ற மார்பு முதலானவற்றை இடப்பிறப்பு என்பர்.
* உதடு முதலான உறுப்பிகளின் தொழில் வேறுபாட்டினால் ஒலிப்பதனை முயற்சிப் பிறப்பு எனவும் கூறுவர்.
* ஒலி எழக் காரணமான காற்று நிலைபெறும் இடங்களைக் காற்றறைகள் எனவும், ஒலி எழுவதற்குத் துணை செய்யும் உறுப்புகளை ஒலிப்பு முனைகள் எனவும் கூறுவர்.
* எழுத்துக்களின் பிறப்பினை நன்னூலார் (பவணந்திமுனிவர்) கூறினார்
* பன்னிரண்டு உயிரும், ஆறு இடையின எழுத்துகளும் கழுத்தில் பிறக்கின்றன. * மெல்லின எழுத்துக்கள் மூக்கில் பிறக்கின்றன.


* வல்லின எழுத்துக்கள் மார்பில் பிறக்கின்றன. மெல்லின எழுத்துக்களை மூக்கொலி எனவும் வழங்குவர்.
* ஆய்தமாகிய சார்பெழுத்து தலையை இடமாக கொண்டு பிறக்கிறது.
* சார்பெழுத் தேனவும் தம் முதல் அனைய
* இரண்டு உதடுகள் பொருந்துவதால் பிறக்கும் எழுத்துக்கள் - ப், ம்
* உதடுகள் குவித்து ஒலிப்பதனால் பிறக்கும் எழுத்துக்கள் - உ, ஊ, ஒ,ஓ, ஔ
* தொழிலைக் குறிக்கும் பெயர் தொழிற்பெயர் எனப்படும்.
தொழிற்பெயர் இரு வகைப்படும்.
* விகுதிகளே இல்லாமல் பகுதி மட்டும் தொழிலை உணர்த்துவதற்கும் முதனிலைத் தொழிற்பெயர் ஆகும்.
* தொழிற்பெயரின் பகுதி திரிந்து வருவது முதனிலைத் திரிந்த தொழில்பெயர் ஆகும்.
* வினைமுற்று, வினையைக்குறிக்காமல் வினை செய்தவரைக் குறிப்பது வினையாலணையும் பெயர்.
* தொழில்பெயர் படர்க்கை இடத்தில் வரும். காலம் காட்டாது.
* வினையாலனையும் பெயர் மூவிடங்களிலும் வரும். முக்காலத்தையும் காட்டும்.


* பண்பை உணர்த்தும் பெயர் பண்புப் பெயர்.
* யான் என்னும் தன்னைப் பன்மைப் பெயர் உருபேற்கும் போது எம் எனத்திரியும்.
* நாம் என்னும் தன்மைப் பெயர் நம் எனக்குறுகும் யாங்கள், நாங்கள் என்னும் தன்மைப் பன்மைப் பெயர்கள் உருபேற்கும் போது எங்கள் எனத் திரியும்.
* நீ எனும் முன்னிலைப் பெயர் உருபேற்கும்போது உன் எனத்திரியும்.
* நீர் எனும் முன்னிலைப் பெயர் உருபேற்கும்போது உம் எனத்திரியும்.
* நீங்கள் எனும் முன்னிலைப் பெயர் உருபேற்கும்போது உங்கள் எனத்திரியும்.
* தான் என்னும் படர்க்கைப் பெயர் உருபேற்கும்போது தான் எனத்தெரியும்.
* தாம் என்னும் படர்க்கைப் பெயர் தம் எனத் திரிந்து உருபேற்கும்.
* தாங்கள் என்னும் படர்க்கைப் பெயர் தங்கள் எனத்திரியும்.
* காட்சி என்னும் தொழிற்பெயர் காண்+சி எனப் பிரியும்.

* மாட்சி என்பது பண்புப்பெயர் ஆகும்.
* வரவு என்னும் தொழிற்பெயரின் விகுதி - 2.
* வட்டம் என்பது வடிவப் பண்பு பெயர் ஆகும்.
* ஒரு செய்யுளில் பொருள் உணர்வுக்கு ஏற்ற வகையில் அமைத்துக்கொள்ளும் முறையை பொருள்கோள் என வழங்குவர்.
* பொருள்கோள் எட்டு வகைப்படும்.
* பாடலின் சொற்கள் முன்பின் மாறாது நேரே சென்று பொருள் கொள்வது ஆற்றுநீர் பொருள்கோள் ஆகும்.
* ஓரடியுள் உள்ள சொற்களை மாற்றிப் பொருள் கொள்வது மொழிமாற்றுப் பொருள் கோளாகும்.
* செய்யுளில் இருக்கின்ற சொற்களை முறைமாறாமல் வரிசையாக அமைத்துப் பொருள் கொள்வது நிரல்நிறையப் பொருள்கோள்.
* அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது - இக்குறள் நிரல்நிறைப் பொருள்கோள்
* வில்லின் இருமுனைகளையும் இணைத்துக் கட்டுதல் போல பொருள்கொள்வது விற்பூட்டு பொருள்கோள் ஆகும்.
* "நெருதல் உளன் ஒருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்திவ் அலகு" - இக்குறல் விற்பூட்டுப்பொருள் கோளுக்குச் சான்றாகும்.


தொடரும்...

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot