வாழ்வியல் பயிற்சி முகாம்
பெற்றோர்களே பிள்ளைகளிடம் பேசுங்கள்
வாழ்வியல் பயிற்றுனர் அறிவுரை
உலக எய்ட்ஸ் தினம்
தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு வாழ்வியல் பயிற்சி முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு வந்தவர்களை ஆசிரியை முத்து லெட்சுமி வரவேற்றார்.பள்ளி தலைமை
ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினர் . திண்டுக்கல் மாநகராட்சி
சுகாதார ஆய்வாளரும்,வாழ்வியல் பயிற்றுனருமான ரெங்கராஜ் மாணவர்களிடம்
பேசுகையில், வாழ்வியல் திறன்கள் மொத்தம் பத்து உள்ளன.அவற்றை நாம்
வாழ்க்கையில் கடைபிடித்தால் மிகப்பெரிய வெற்றியாளராக
மாறமுடியும்.மாணவர்களாகிய நீங்கள் தினமும் பள்ளியில் நடந்த விஷயங்களை
வீட்டில் பெற்றோரிடம் மனம் விட்டு பேசுங்கள்.திறமையாக முடிவெடுக்கும்
ஆற்றலை வளர்த்து கொள்ளுங்கள்.நல்ல,கெட்ட தொடுதல் குறித்து அறிந்து கொண்டு
அதற்கேற்ப செயல்படுங்கள்.நல்ல நண்பர்களை தேர்ந்தெடுங்கள்.பிறருக்கு உதவி
செய்யுங்கள்.விளையாட்டு முறையில் பல்வேறு திறன்களை மாணவர்களுக்கு புரியும்
வகையில் எளிதாக விளக்கினார்.மாணவர்கள் அனைவரையும் இலக்கு நோக்கி
பயணிக்குமாறு கேட்டு கொண்டார்.மாணவர்கள் கோட்டையன் ,ஜெனிபர்
,காயத்ரி,கிஷோர்குமார்,அஜய் பிரகாஷ்,நித்ய கல்யாணி ஆகியோர் பல்வேறு
கேள்விகள் கேட்டு பதில்கள் பெற்றனர்.பெற்றோர்கள்
செந்தாமரை,மஹேஸ்வரி,சீதாலட்சுமி ஆகியோர் உட்பட பலர் கலந்து
கொண்டனர்.நிறைவாக ஆசிரியர் கருப்பையா நன்றி கூறினார்.
பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற வாழ்வியல் பயிற்சி முகாமில் மாணவர்களும்,பெற்றோர்களும் திண்டுக்கல் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ரெங்கராஜுடன் கலந்துரையாடல் செய்தனர்.