போட்டித் தேர்வுகளில் பங்கேற்போருக்கான அரசு இலவச பயிற்சிமையம் தொடக்கம்: ஆண்டுக்கு 2,000 மாணவர்கள் வீதம் பயிற்றுவிக்கப்படுவார்கள் - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Thursday, 4 January 2018

போட்டித் தேர்வுகளில் பங்கேற்போருக்கான அரசு இலவச பயிற்சிமையம் தொடக்கம்: ஆண்டுக்கு 2,000 மாணவர்கள் வீதம் பயிற்றுவிக்கப்படுவார்கள்

மத்திய, மாநில அரசுகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் பங்கேற்போருக்கான இலவச பயிற்சி மையத்தை தமிழக அரசு சென்னையில் தொடங்கியுள்ளது.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள தியாகராயா கல்லூரி வளாகத்தில் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை சார்பில் போட்டித் தேர்வுகளில் பங்கேற்போருக்கான இலவச பயிற்சி மைய தொடக்க விழா நேற்று நடைபெற்றது.

இந்த விழாவில், பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு போட்டித் தேர்வுகளுக்கான கையேடுகளை வழங்கி மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் பேசியதாவது:ரயில்வே பணியாளர் வாரியம், மத்திய அரசு பணியாளர் தேர்வு வாரியம், மத்திய வங்கி பணியாளர்களுக்கான தேர்வு வாரியம், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆகியவற்றால் நடத்தப்படும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் ஏழை மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக ரூ.1.53 கோடி செலவில் பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த பயிற்சி மையத்துக்காக ஆண்டுதோறும் ரூ.1.25 கோடியை தமிழக அரசு ஒதுக்கவுள்ளது. 3 மாதங்களுக்கு 500 மாணவர்கள் என்ற அடிப்படையில் இந்த பயிற்சி மையத்தில் ஆண்டுக்கு 2,000 மாணவர்கள் வீதம் பயிற்றுவிக்கப்படுவார்கள். பயிற்சி பெறும் ஒவ்வொருவருக்கும் ரூ.1,000 மதிப்பிலான பயிற்சி கையேடு இலவசமாக வழங்கப்படும். இந்தவாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் வாங்கிய மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் பயிற்சிக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தற்காலிகமாக தியாகராயா கல்லூரி வளாகத்தில் பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் நிரந்தர உண்டு, உறைவிட வசதிகளுடன் கூடிய பயிற்சி மைய கட்டிடம் வடசென்னையின் ஒரு இடத்தில் கட்டி முடிக்கப்படும். அடுத்தகட்டமாக கோவை, மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் இதே போன்று பயிற்சி மையங்களை தொடங்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் பயிற்சித் துறை தலைவர் கே.ஞானதேசிகன், கூடுதல் இயக்குநர் ஏ.சண்முகசுந்தரம், பணியாளர், நிர்வாக சீர்திருத்தத்துறை செயலர் டாக்டர் எஸ்.ஸ்வர்ணா, சர் தியாகராயா கல்லூரியின் தாளாளர் பி.குமாரசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot