- Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Wednesday, 17 January 2018

பாரத ஸ்டேட் வங்கியில் பள்ளி மாணவர்கள் 

 எ .டி .எம்.அட்டை தொலைந்து போனால் 1800112211 மற்றும் 18004253800 என்று எண்ணுக்கு தகவல் சொல்லுங்கள் 

 ஏ .டி .எம்மில் தவறான எண்ணை அமுக்கி விட்டால் என்ன செய்ய வேண்டும்?

வங்கியில் படிவம் இல்லாமல் சுவைப் மெசின்
மூலம் பணம் எடுப்பது எப்படி என்று நேரடியாக சென்று அறிந்து கொண்ட மாணவர்கள் 



தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தேவகோட்டையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக்கு நேரடியாக களப்பயணம் சென்றனர்.தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக மாணவர்கள் வங்கி களப்பயணம் செல்வது குறிப்பிடத்தக்கது.
                            வங்கியில் அனைவரையும் துணை மேலாளர் சிவக்குமார் வரவேற்றார்.வங்கியின்முதன்மை மேலாளர் வேல்முருகன் தலைமை தாங்கினார் . பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார்.வங்கி உதவியாளர் முருகன் மாணவர்களுக்கு  செயல்முறை விளக்கம் அளித்தார்.வங்கியின் செயல்பாடுகள் என்ன,என்ன என்பது குறித்து விளக்கப்பட்டது.வங்கியில் பொதுமக்கள்
பயன்பாடும்,பொதுமக்களுக்கு வங்கியின் சேவை குறித்தும் எடுத்து கூறினார்.வங்கியில் அமைந்து உள்ள ஒவ்வொரு பிரிவையும் தனித்தனியே மாணவர்களை அழைத்து சென்று விளக்கம் அளித்தார்.பணம் செலுத்தும் படிவம்,பணம் எடுக்கும் படிவம்,காசோலை எடுக்கும் படிவம்,நகை கடன் செலுத்துவது , செலுத்திய பணத்தை எடுப்பது , ஏ டி எம் இயந்திரத்தினை பயன்படுத்துவது எவ்வாறு  என்பதை செய்து காண்பித்து விளக்கமாக எடுத்து கூறினார்.எ .டி .எம்.அட்டை தொடர்பாக யார் எந்த தகவல் கேட்டாலும் சொல்ல வேண்டாம் என்று விளக்கி சொன்னார்கள். எ .டி .எம்.அட்டை தொலைந்து போனால் 1800112211 மற்றும் 18004253800 என்று எண்ணுக்கு தகவல் சொல்லுங்கள்.இவ்வாறு பல்வேறு தகவல்களை விரிவாக விளக்கினார்கள்.வங்கி மேலாளரிடம் மாணவர்கள் காயத்ரி,ராஜேஷ்,நந்தகுமார்,சந்தியா,மாதரசி,சக்தி ஆகியோர் சந்தேகங்கள்  கேட்டு பதில்கள் பெற்றனர்.மாணவர்களை ஆசிரியர் கருப்பையா அழைத்து சென்றார்.பள்ளியின் சார்பாக ஆசிரியை செல்வமீனாள் நன்றி கூறினார்.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தேவகோட்டையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக்கு நேரடியாக களப்பயணம் சென்றபோது வங்கியின் முதன்மை மேலாளர் வேல்முருகன் தலைமையில் வங்கி உதவியாளர் முருகன் மாணவர்களுக்கு வங்கி தொடர்பாக விரிவாக விளக்கினார்.
























மேலும் விரிவாக :



ஏ .டி .எம்மில் தவறான எண்ணை அமுக்கி விட்டால் என்ன செய்ய வேண்டும்?

சுவைப் மெஷினை பயன்படுத்துவது எப்படி ?
சுவைப் மெசின் என்றால் என்ன ?
வங்கியில் படிவம் இல்லாமல் சுவைப் மெசின்
மூலம் பணம் எடுப்பது எப்படி ?
வங்கியில்  படிவம் இல்லாமல்  கிரீன் கார்டு மூலம் பணம் செலுத்துவது  எப்படி?
கிரீன் கார்டு என்றால் என்ன?
  வங்கி நடைமுறைகள் எப்படி?
  தேவகோட்டை  நடுநிலை பள்ளி மாணவர்கள் ஆர்வம்.

தொடர்ந்து ஐந்தாவது  ஆண்டாக எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களை வங்கிக்கு நேரடியாக அழைத்து சென்று வங்கி தொடர்பாக விளக்குதல் -நேரடி செயல் விளக்கம் தருதல்



தேவகோட்டை -  
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும்  நடுநிலை பள்ளி மாணவ மாணவியர் வங்கி நடைமுறைகள் பற்றி நேரடியாக  முழுவதுமாக அறிந்து கொள்ளும் வாய்ப்பினை பெற்றனர்.

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி மாணவ மாணவியர்க்கு வங்கி தொடர்பான நடைமுறைகள் அறிந்து கொள்ள தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் ஏற்பாடு செய்தார்.
தேவகோட்டை பாரத் ஸ்டேட் வங்கி கிளை முதன்மை மேலாளர் வேல்முருகன்  சம்மதம் தெரிவித்தார்.
மாணவர்கள் பள்ளியிலிருந்து வங்கிக்கு சுற்றுலாவிற்கு பயணிப்பது போல் உற்சாகத்துடன் அனைவரும் சென்றனர்.வங்கி  உதவியாளர் முருகன் மாணவர்களுக்கு செயல்முறை விளக்கம் அளித்தார்.
வங்கியின் செயல்பாடுகள் என்ன,என்ன என்பது குறித்து விளக்கப்பட்டது.
வங்கியில் பொதுமக்கள் பயன்பாடும்,பொதுமக்களுக்கு வங்கியின் சேவை குறித்தும் எடுத்து கூறினார்.வங்கியில் அமைந்து உள்ள ஒவ்வொரு பிரிவையும் தனித்தனியே மாணவர்களை அழைத்து சென்று விளக்கம் அளித்தார்.பணம் செலுத்தும் படிவம்,பணம் எடுக்கும் படிவம்,காசோலை எடுக்கும் படிவம்,நகை கடன் செலுத்துவது எப்படி? செலுத்திய பணத்தை எடுப்பது எப்படி? ஏ டி எம் இயந்திரத்தினை பயன்படுத்துவது எப்படி? என்பதை செய்து காண்பித்து விளக்கமாக எடுத்து கூறினார்.
சுவைப் மெஷினை பயன்படுத்துவது எப்படி ?
சுவைப் மெசின் என்றால் என்ன ?
வங்கியில் படிவம் இல்லாமல் சுவைப் மெசின்
மூலம் பணம் எடுப்பது எப்படி ?
பணம் செலுத்தும் கவுன்ட்டர் ,உதவியின்றி ஏ டி எம் அறையிலியே 24 மணி நேரமும் நம் கணக்கில் பணம் செலுத்துவது எப்படி என்றும் செய்து காண்பித்தார்.வங்கியில் கல்விக்கடன்,விவசாய கடன் ,தனிநபர் கடன்,வியாபார கடன்,ஆடம்பர பொருள்களுக்கு வாங்க  வழங்கும் கடன் மற்றும் நகை கடன் இவைகளை எவ்வாறு பெறுவது என்பதையும், அதற்கு நாம் தயார்செய்து கொடுக்க வேண்டிய ஆவணங்கள் குறித்தும் விளக்கம் அளித்தார்.பணம் செலுத்தும்போதும் ,எடுக்கும்போதும் பாஸ் புக்கை  பயன்படுத்துவது எப்படி என்றும் எடுத்து கூறினார்.பணம் என்னும் மெசினை காண்பித்து அதனில் எவ்வாறு பணம் எண்ணுகிறார்கள் என்பதயும் செய்து காண்பித்தார்கள்.எ .டி .எம்.அட்டை தொடர்பாக யார் எந்த தகவல் கேட்டாலும் சொல்ல வேண்டாம் என்று விளக்கி சொன்னார்கள். எ .டி .எம்.அட்டை தொலைந்து போனால் 1800112211 மற்றும் 18004253800 என்று எண்ணுக்கு தகவல் சொல்லுங்கள்.வங்கி மேலாளரிடம் மாணவர்கள் காயத்ரி,ராஜேஷ்,நந்தகுமார்,சந்தியா,மாதரசி,சக்தி
ஆகியோர் படிவங்கள் பூர்த்தி செய்வது தொடர்பாகவும் , புதிய நடை முறையில் படிவம் இல்லாமல் கிரீன் கார்டு கொண்டு பணம் செலுத்துவது எவ்வாறு ? , கிரீன் கார்டு என்றால் என்ன? , வங்கியில் கணக்கு துவங்கும்போது எவ்வளவு பணம் முதலில் இருக்க வேண்டும் ? என்பன போன்ற கேள்விகளை கேட்டு பதில்களை பெற்றனர்.  கண் தெரியாதவர்கள்  எவ்வாறு ATM  மெசினில் பணம் எடுப்பார்கள் என்பது தொடர்பாகவும் விளக்கமாக கூறினார்.IFSC கோடு என்பது தொடர்பாக தெளிவாக விளக்கினார்கள் .அந்த கோடு என்தான் அந்த வங்கியின் எண் என்றும் அதனை இந்தியாவின் எங்கு வேண்டுமானாலும் சென்று கொடுக்கலாம் என்றும்,அதன் வழியாக பணம் பரிவர்த்தனை செய்து கொள்ளலாம் என்றும் தெளிவாக சொன்னார்கள்.சில மணி நேரங்கள் மாணவ,மாணவியர் உற்சாக வெள்ளத்தில் திளைத்தனர்.

பட விளக்கம : தேவகோட்டை  சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி மாணவர்கள் பாரத ஸ்டேட் வங்கியின் நடைமுறைகளை பார்வையிட்டபோது எடுத்த படம் 





வங்கிக்கு வந்தது தொடர்பாக மாணவர்களின் கருத்து : 

காயத்ரி : எனக்கு இது புதிய அனுபவமாக இருந்தது.நான் இந்த வங்கியின் முன்பு எப்போதாவது செல்லும்போது பார்த்து கொண்டே செல்வேன்.இன்று வங்கியின் மேலாளர் வேல்முருகன் சார்,முருகன் சார் ஆகியோர் எங்களுக்கு தெளிவாக வங்கி தொடர்பாக சொன்னார்கள்.எ .டி .எம்.எண் தவறாக அழுத்தி விட்டால் மீண்டும் அதில் உள்ள மஞ்சள் பட்டனை அழுத்தினால் புதியதாக பழைய நிலைக்கு வந்துவிடும் என்று சொன்னார்கள்.யார் வங்கி தொடர்பாக தொலைபேசியில் சொன்னாலும் தகவல் சொல்ல வேண்டாம் என்று தெளிவாக சொன்னார்கள்.அவ்வாறு மீண்டும்,மீண்டும் கேட்டால் போலீசில் தகவல் சொல்ல சொன்னார்கள்.ஏ.டி .எம்.எவ்வாறு பயன்படுத்துவது என்றும் சொன்னார்கள்.வங்கியில் பணம் எண்ணுவது தொடர்பாகவும் தெளிவாக விளக்கினார்கள்.எட்டாம் வகுப்பு படிக்கும்போதே எங்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.எனது வங்கி தொடர்பான விளக்கங்களை YOUTUBE இல்  கீழ்கண்ட லிங்க் வழியாக https://www.youtube.com/watch?v=M7MNl4J6kS0&t=35s காணலாம்.
சந்தியா : என்னை எங்கள் அம்மா வங்கிக்கு வரும்போதெல்லாம் வெளியவே நிருத்தி  விடுவார்கள்.எனக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்லி விடுவார்கள்.நான் இன்று வங்கி தொடர்பான பல்வேறு விஷயங்களை தெரிந்து கொண்டேன்.எங்கள் அம்மாவிற்கும் ,வீட்டின் அருகில் இருக்கும் மற்றவர்களுக்கும் இதனை எடுத்து சொல்வேன்.

  சக்தி : வங்கியின் முதன்மை மேலாளர் மற்றும் முருகன் ஆகியோர் வங்கியின் பல்வேறு பிரிவுகளையும் நன்றாக புரியும்படி விளக்கினார்கள்.சுவைப் மெஷின் தொடர்பாக தெளிவாக எடுத்து சொன்னதுடன் அதனில் எவ்வாறு பணம் எடுப்பதையும் எடுத்து காண்பித்து விளக்கினார்கள்.நன்றாக புரிந்தது.எங்கள் அம்மா வங்கிக்கு வரவே பயப்பிடுவார்கள்.இனிமேல் நான் தைரியம் சொல்லி அழைத்து வந்து நானே பண பரிவர்த்தனை தொடர்பாக எங்கள் அம்மாவிற்கு சொல்லி கொடுக்கும் அளவுக்கு விளக்கி சொன்னார்கள்.
ராஜேஷ்  : ATM மெசின் தொடர்பாக நன்றாக விளக்கி சொன்னார்கள்.எனது அம்மாவுடன் வந்து நானே ATM மூலம் பணம் எடுக்கும் அளவிற்கு கற்று கொண்டுள்ளேன்.வங்கி என்றால் பயம் என்பதை நன்றாக விளக்கி பயத்தை போக்கி உள்ளனர்.
ஜெகதீஸ்வரன் : பணம் என்னும் இயந்திரத்தை இப்போதுதான் பார்த்தேன்.நன்றாக இருந்தது.பணம் என்னும் தகவலை பார்த்து ஆச்சரியப்பட்டேன் என்றார்.
நந்தகுமார்  : IFSC கோடு என்பது தொடர்பாக தெளிவாக விளக்கினார்கள் .அந்த கோடு என்தான் அந்த வங்கியின் எண் என்றும் அதனை இந்தியாவின் எங்கு வேண்டுமானாலும் சென்று கொடுக்கலாம் என்றும்,அதன் வழியாக பணம் பரிவர்த்தனை சித்து கொள்ளலாம் என்றும் தெளிவாக சொன்னார்கள்.படிப்பு கடன்கள் தொடர்பாகவும் தெளிவாக சொன்னார்கள்.

  சின்னம்மா : பாதுகாப்பு பெட்டக வசதி பற்றி தெரிந்து கொண்டோம்.நம் வீட்டில் உள்ள நகைகளை வங்கியில் பத்திரமாக வைத்து கொள்ளலாம் என்றும் , அவற்றை வங்கியில் வைப்பதற்கு வைப்பு தொகை கட்ட வேண்டும் என்றும் அதற்கு வாடகை கொடுக்க வேண்டும் என்றும் அறிந்து கொண்டோம்.

காவியா  : வங்கி என்றால் என்னவென்றே தெரியாத எங்களுக்கு வங்கியில் உள்ள அனைத்து செயல்பாடுகளையும் விளக்கி சொன்னது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.எனது தாயும்,தந்தையும் பல மாதங்கள் வேலைக்கு வெளியூர்கள் சென்று விடுவார்கள் .அப்படி உள்ள எனக்கு இது ஒரு புதிய அனுபவமாகவும்,வாழ்க்கைக்கு பயனுள்ளதாகவும் இருந்தது.

                   அனைத்து மாணவர்களும் இது ஒரு புதிய அனுபவமாக இருந்தது என்று சொன்னார்கள்.

வாடிக்கையாளர் வந்தவர் சொன்னது: நான் படிக்கும் காலத்தில் வங்கிக்கு வந்தது கிடையாது.பணிக்கு சென்ற பிறகு வேறு வழியில்லாமல் பணியின் காரணமாக பயந்து கொண்டே ஒரு வங்கிக்கு சென்றேன்.இந்த மாணவர்கள் எட்டாம் வகுப்பு படிக்கும்போதே பாரத ஸ்டேட் வங்கிக்கு வந்து அனைத்து செயல்பாடுகளையும் அறிந்து கொண்டுள்ளது பாராட்ட வேண்டியது என்று கூறினார்.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot