'மாணவர்களின் மன அழுத்தம் குறைக்க ஒருங்கிணைந்த குழு' - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Tuesday, 23 January 2018

'மாணவர்களின் மன அழுத்தம் குறைக்க ஒருங்கிணைந்த குழு'

''வெளி மாநிலங்களில் படிக்கும் மருத்துவ மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில், ஒருங்கிணைந்த குழு அமைக்கப்படும்,'' என, சுகாதாரத் துறை அமைச்சர், விஜயபாஸ்கர் கூறினார்.
சென்னை, எழும்பூர் குடும்ப நலத்துறை அலுவலகத்தில், மலேரியா ஒழிப்பு கருத்தரங்கம் நேற்று நடந்தது. இதில்,சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:மத்திய அரசு, மலேரியாவை, 2030க்குள் ஒழிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. தமிழகத்தில், 2022க்குள் மலேரியாவை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.தமிழகத்தில், 23 மாவட்டங்களில், மலேரியா முழுமையாக ஒழிக்கப்பட்டுள்ளது. ஏழு ஆண்டுகளாக, தமிழகத்தில் மலேரியாவால், உயிரிழப்புகள் ஏற்படவில்லை.வெளி மாநிலங்களில் படிக்கும் மருத்துவ மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில், ஒருங்கிணைந்த குழு அமைக்கப்படும். இந்த குழுவினர், வெளிநாடு, வெளி மாநிலங்களில் படிக்கும் தமிழக மருத்துவ மாணவர்களுடன் தொடர்பில் இருப்பர். அவர்களுக்கு தேவைப்படும்போது, ஆலோசனைகள் வழங்குவர்.இவ்வாறு அவர் கூறினார்.

துறை செயலர், ராதாகிருஷ்ணன் கூறுகையில், ''தமிழகத்தில், கன்னியாகுமரி, துாத்துக்குடி, ராமநாதபுரம், தர்மபுரி, சென்னை ஆகிய கடலோர மாவட்டங்களில், மலேரியா முழுமையாக தடுக்கப்படவில்லை.2017ல், மலேரியாவால், 5,400 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். எனவே, மலேரியா ஒழிப்பில் சிறப்புக்கவனம் செலுத்துவது அவசியம்,'' என்றார்.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot