அங்கீகாரம் இல்லாத பல்கலைகளில், இன்ஜி., படித்தவர்கள், நுழைவு தேர்வில் பங்கேற்க, அகில இந்தியதொழில்நுட்ப கல்வி கவுன்சில், அனுமதி அளித்துள்ளது.
நாடு முழுவதும், பல்கலை மானியக்குழுவான, யு.ஜி.சி.,யின் அங்கீகாரம் பெற்ற பல்கலைகள், அனைத்து வகை படிப்புகளையும், தொலைநிலையில் வழங்கினர்.இந்நிலையில், தொலைநிலையில் நேரடியாக வழங்கப்படும் பட்டப்படிப்புகள் செல்லாது என, ஏழு ஆண்டுகளுக்கு முன் உச்ச நீதிமன்றம் அறிவித்தது.
இதை தொடர்ந்து, நான்கு சுயநிதி பல்கலைகளில், 2001 - 2005ம் கல்வியாண்டுகளில் வழங்கப்பட்ட, பி.இ., - பி.டெக்., - எம்.இ., - எம்.டெக்., பட்டப்படிப்புகளை, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., ரத்து செய்தது.அதனால், பாதிக்கப்பட்ட மாணவர்கள், பல்கலைகள், உச்ச நீதிமன்றத்தை அணுகினர். இந்த பிரச்னையை உச்ச நீதிமன்றம் விசாரித்து, 'பட்டப்படிப்பு ரத்தான, நான்கு பல்கலைகளின் மாணவர்களுக்கு, 'கேட்' போன்ற தொழில்நுட்ப நுழைவு தேர்வு நடத்த வேண்டும்; அதில், தேர்ச்சி பெறுவோரின் பட்டங்களை, அரசு வேலை உட்பட அனைத்திற்கும் ஏற்கலாம்' என, உத்தரவிட்டது.
இதையடுத்து, நுழைவு தேர்வுக்கான ஆன்லைன் பதிவு துவங்கி உள்ளது. இதற்கான கால அவகாசத்தை, ஏ.ஐ.சி.டி.இ., அறிவித்துள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய, ராஜஸ்தான் வித்யாபீத் பல்கலை, ராஜஸ்தானில் உள்ள கல்வியில் முன்னேறிய படிப்புகளுக்கான பல்கலை, அலகாபாத் வேளாண் கல்வி நிறுவனம்... தமிழகத்தில், சேலம் விநாயகா மிஷன் பல்கலை ஆகியவற்றில், இன்ஜி., படித்து, பட்டங்கள் ரத்தானவர்கள், இந்த தேர்வில் பங்கேற்கலாம்.இந்த தேர்வுக்கு, பிப்., 5க்குள், ஏ.ஐ.சி.டி.இ., யின், www.aicte-india.org என்ற இணையதளத்தில், பதிவு செய்யலாம் என, கூறப்பட்டுள்ளது.