கல்வித்துறை அமைச்சு பணியாளர்கள் அதிருப்தி:விருதுக்கு பரிந்துரைக்காததாக புகார் - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Sunday 28 January 2018

கல்வித்துறை அமைச்சு பணியாளர்கள் அதிருப்தி:விருதுக்கு பரிந்துரைக்காததாக புகார்

சுதந்திர தினம், குடியரசு தின விழாக்களின் போது மாவட்ட அளவில் துறைகள் வாரியாக சிறப்பாக பணி புரியும்அதிகாரிகள், ஊழியர்களுக்கு கலெக்டர் விருது, பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.
இந்தாண்டு குடியரசு தின விழாவில் 187 பேருக்கு கலெக்டர் வீரராகவராவ் வழங்கினார். கல்வித்துறையில் சி.இ.ஓ., நேர்முக உதவியாளர் ஆதிராமசுப்பு, உடற்கல்வி ஆய்வாளர் செங்கதிர், தலைமையாசிரியர் சின்னதுரை ஆகியோருக்கு மட்டும் விருதுகள் வழங்கப்பட்டன.கல்வித்துறை அமைச்சு பணியாளர் விருது பெற பரிந்துரைக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என புகார் எழுந்துள்ளது.அமைச்சு பணியாளர்கள் கூறியதாவது: மாவட்டத்தில் உதவியாளர், இளநிலை உதவியாளர், கண்காணிப்பாளர் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ளனர். வழக்கமான பணிகளுடன் தேர்வுத் துறை நடத்தும் தேர்வுகளில் இரவு பகல் பாராமல் பணிபுரிகின்றனர். அனைத்து துறையினரும் 'கலெக்டர் விருது' பெறும்போது எங்களுக்கு விருது கிடைக்கவில்லை.

இத்துறையில் தேர்வு செய்யப்பட்ட மூவரில் இருவர் தலைமையாசிரியர்கள், ஒருவர் உடற்கல்வி ஆசிரியர். இவர்களை பரிந்துரைத்தது தவறு இல்லை. ஆனால் கல்வித்துறை அதிகாரிகள் எங்களை ஒட்டுமொத்தமாக புறக்கணித்துள்ளனர். விருது பெறும் தகுதி எங்களுக்கு இல்லையா.

இதுகுறித்து கலெக்டர், முதல்வர் கவனத்திற்குகொண்டு செல்லப்படும், என்றனர்.ஊரக வளர்ச்சித்துறையில்குறிப்பிட்ட ஒரு தொழிற்சங்க ஊழியர்கள் மட்டும் கலெக்டர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளதாக ஊரக வளர்ச்சி, ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் சங்க நிர்வாகிகளும் புகார் தெரிவித்தனர்.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot