தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்சி முடிக்காவிட்டால் வேலையிழக்க நேரிடும்’ என மத்திய அரசு அறிவித்துள்ளது.
கட்டாயக் கல்வி சட்டம் 2009இன்படி அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சியைக் கட்டாயம் முடிக்க வேண்டும். இரண்டாண்டு டிப்ளோமா ஆசிரியர் (டிஎல்ஈடி) பயிற்சியை முடிக்காதவர்கள் வேலையிழக்க நேரிடும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.
தேசிய திறந்தநிலைப் பள்ளி மண்டல இயக்குநர் ரவி, “தேசிய திறந்தநிலைப் பள்ளி மூலம் ஆசிரியர் பயிற்சி படிப்புக்கான திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஸ்வயம் பிரபா என்கின்ற சேனல் மூலம் இதற்கான பாடங்களை கற்க முடியும். பணியில் இருந்துகொண்டே ஆசிரியர்கள் பயிற்சிக்கான டிப்ளோமா படிப்பை பயில முடியும். மேலும், மொபைல் ஆப் மூலமாகவும் படிக்க முடியும்” எனக் கூறியுள்ளார்.
நாடு முழுவதும் 15 லட்சம் ஆசிரியர்களும், தமிழகத்தில் 25,600 பேரும் டிஎல்ஈடி பயிற்சியில் சேர்ந்துள்ளனர். 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இவர்களுக்குத் தேர்வு நடக்க இருக்கிறது. அதில் தேர்ச்சி பெறாதவர்கள் தங்கள் வேலையை இழக்க நேரிடும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.