அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் உள்ள விருப்பம் உள்ள 9, 10-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு உணவு பதப்படுத்துதல், சிறுவணிகம், வாகனம்சார் திறன், உடல் நலம் பேணுதல், வனப்பு மற்றும் உடல் நலம் போன்ற தொழில் திறன்களை ஆசிரியர்கள் கற்பிக்க உள்ளனர்.
இதற்காக ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் ஒரு பள்ளியை தேர்ந்து எடுத்து அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஒரு ஆசிரியருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று நடந்த பயிற்சியை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்து பேசியதாவது:-
‘நீட்’ தேர்வு
வேலைவாய்ப்பு கல்விக்கான பயிற்சிக்காக ரூ.3 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ‘நீட்’ தேர்வை சந்திக்க ஆன்லைன் மூலம் 72 ஆயிரம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து உள்ளனர். முதல் கட்டமாக 100 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு அந்த மையங்களில் மாணவர்கள் படித்துவருகிறார்கள். மீதம் உள்ள 312 மையங்களும் சில நாட்களில் ஏற்படுத்தப்படும்.
இந்த மையங்களில் சிறப்பாக படிக்கும் மாணவர்களில் 2 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்படுவார்கள். தலா 500 மாணவர்கள் வீதம் 4 கல்லூரிகளில் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சி பிளஸ்-2 தேர்வுக்கு பிறகு நடக்கும். அவர்கள் தங்கி படிக்க ஏற்பாடும் செய்யப்படும். இந்த ஆண்டுக்கான மடிக்கணினி மார்ச் மாதத்துக்குள் மாணவர்களுக்கு வழங்கப்படும்.
வேலைவாய்ப்பு
கடந்த ஆண்டு ‘நீட்’ தேர்வில் தமிழகத்தில் அரசு பள்ளியில் படித்த 2 பேர் தான் எம்.பி.பி.எஸ். சேர்ந்தனர். இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் இருந்து 1,000 மாணவ-மாணவிகள் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்வார்கள். அந்த அளவுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.10, 11, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் வருங்காலத்தில் என்ன படித்தால் வேலைவாய்ப்பு உறுதி என விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிகளில் பட்டியலிடப்பட்டு உள்ளன.இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வரமுருகன் வரவேற்றார். பயிற்சி தொடக்க நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ், பள்ளிக்கல்வி இயக்குனர் இளங்கோவன், துணை இயக்குனர் நாகராஜமுருகன், பயிற்சி நிபுணர் ராஜ் கில்டா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக அரசு முயற்சி
பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு பெற மத்திய அரசை தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இருப்பினும் இந்த ஆண்டு ‘நீட்’ தேர்வை எதிர்கொள்ள தமிழக மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. தலைமை ஆசிரியர் இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும். ஆனால் இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. தமிழகத்தில் உள்ள ஈராசிரியர் பள்ளிகளில் கல்வித்தரத்தை மேம்படுத்த, தேவைப்பட்டால் கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று கூறினார்."