79.78 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Wednesday 7 February 2018

79.78 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 79.78 லட்சமாக உள்ளது. கடந்த ஜனவரி 31-ஆம் தேதி நிலவரப்படி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை குறித்த விவரங்களை வயது வாரியாக தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி, 18 வயதுக்குள் உள்ள பள்ளி மாணவர்கள் 20 லட்சத்து 69 ஆயிரத்து 337 பேரும், 18 முதல் 23 வயது வரையுள்ள பலதரப்பட்ட கல்லூரி மாணவர்கள் 17 லட்சத்து 9 ஆயிரத்து 845 பேரும், 24 முதல் 35 வயது வரையுள்ளவர்கள்30 லட்சத்து 46 ஆயிரத்து 619 பேரும், 36 வயது முதல் 56வயது வரையுள்ள முதிர்வு பெற்ற பதிவுதாரர்கள் என்ற வகையில் 11 லட்சத்து 46 ஆயிரத்து 898 பேரும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர்.

மேலும்,57 வயதுக்கு மேற்பட்டவர்கள் 5 ஆயிரத்து 730 பேர் பதிவுசெய்து காத்திருப்பதாக தமிழக அரசு தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது. மொத்தமாக, 79 லட்சத்து 78 ஆயிரத்து 429 பேர் அரசு வேலைக்காக காத்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot