பிளஸ் 1 பொது தேர்வு துவக்கம்: 8.61 லட்சம் பேர் பங்கேற்பு - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Monday 5 March 2018

பிளஸ் 1 பொது தேர்வு துவக்கம்: 8.61 லட்சம் பேர் பங்கேற்பு

பிளஸ் 1 பொதுத் தேர்வு, நாளை துவங்குகிறது; 8.61 லட்சம் மாணவர்கள் பங்கேற்கின்றனர்.தமிழக பாடத்திட்டத்தில், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகள், 1979ல் அறிமுகம் செய்யப்பட்டன.
அப்போது முதல், பிளஸ் 2வுக்கு, மாநில அளவிலான பொதுத் தேர்வும், பிளஸ் 1க்கு, மாவட்ட அளவிலான தேர்வும் நடத்தப்பட்டது.

அதனால், பள்ளிகளில், பிளஸ் 1 பாடங்களைபெயரளவில் நடத்தினர்; பிளஸ் 2வுக்கு, அதிக முக்கியத்துவம் அளித்தனர்.ஆனால், உயர் கல்வி தொடர்பான நுழைவுத் தேர்வுகளில், பிளஸ் 1 பாடங்களில் இருந்து, அதிக கேள்விகள் இடம் பெறுகின்றன. பிளஸ் 1 பாடங்களை, தமிழக மாணவர்கள் சரியாக படிக்காததால், அதிகமதிப்பெண் பெற முடியவில்லை. இது குறித்து, பள்ளிக்கல்வித் துறை செயலர், உதயசந்திரன் ஆய்வு நடத்தி, பிளஸ் 1க்கும் பொதுத் தேர்வை அறிமுகம் செய்தார். இதனால், பிளஸ் 2க்குஉரிய முக்கியத்துவத்தை, பிளஸ் 1க்கும் தர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.இதன்படி, 38 ஆண்டுகளுக்கு பின், பிளஸ் 1க்கான பொதுத் தேர்வு, முதன்முதலாக, நாளை துவங்குகிறது. இதில், 8.61 லட்சம் மாணவர்களும், 1,753 தனித்தேர்வர்களும் பங்கேற்கின்றனர்.

இதற்காக, தமிழகம், புதுச்சேரியில், 2,795 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. சென்னையில், 156 தேர்வு மையங்களில், 49 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.புதுச்சேரியில், 38 தேர்வு மையங்களில், 15 ஆயிரம் பேர் தேர்வு எழுது கின்றனர். சென்னை, புழல் சிறையில் அமைக்கப்பட்ட தேர்வு மையத்தில், பல்வேறு சிறைகளைச் சேர்ந்த, 62 கைதிகள் தேர்வு எழுத உள்ளனர்.தேர்வு குறித்து, குறைகள் மற்றும் கருத்துக்களை தெரிவிக்க, அரசு தேர்வு துறை சார்பில், கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது. 80125 94105, 80125 94115, 80125 94120, 80125 94125, 93854 94105, 93854 94115, 93854 94120, 93854 94125 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

தேர்வு நேரம் என்ன?

இத்தேர்வு, நாளை துவங்கி, ஏப்., 16ல் முடிகிறது. மாணவர்கள், காலை, 9:30 மணிக்கு தேர்வு மையத்தில் இருக்க வேண்டும். காலை, 10:00 மணிக்கு, வினாத்தாள் வழங்கப்பட்டு, 10:10 மணி வரை படித்து பார்க்க அனுமதிதரப்படும். பின், 10:15 மணி வரை, மாணவர்களின் சுய விபரங்கள் ஆய்வு செய்யப்படும். அதன்பின், 10:15 மணிக்கு மாணவர்கள் விடை எழுத துவங்கலாம்; பகல், 12:45 மணிக்கு முடியும்.வழக்கமாக, பிளஸ் 1க்கு, மூன்று மணி நேரம் தேர்வு நடக்கும். ஆனால், பொதுத் தேர்வு அறிவிக்கப்பட்ட பின், பாட மதிப்பெண், 200ல் இருந்து, 100 ஆக குறைக்கப்பட்டது. அதனால், தேர்வு நேரமும், இரண்டரை மணி நேரமாக குறைக்கப்பட்டது.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot