கோடை விடுமுறை வரும் 21ல் துவக்கம் - ஜூன்,1ல் பள்ளிகள் திறக்கப்படும் - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Friday 13 April 2018

கோடை விடுமுறை வரும் 21ல் துவக்கம் - ஜூன்,1ல் பள்ளிகள் திறக்கப்படும்

''கோடை விடுமுறை, வரும், ௨௧ல் துவங்குகிறது. மீண்டும் ஜூன்,1ல் பள்ளிகள் திறக்கப்படும்,'' என்று, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு மாவட்டம், கோபி அருகே, ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பை, துவக்கிவைத்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:

தமிழகத்தில், 60 கோடி ரூபாய் செலவில், 3,000 பள்ளிகளில், 'ஸ்மார்ட் கிளாஸ்' வகுப்பு துவங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒன்பது முதல், பிளஸ் 2 வகுப்பு மாணவர் வரை, அனைத்து கல்வியும் பயிலும் வகையில், 463 கோடி ரூபாய் செலவில், இன்டர்நெட் வசதி செய்யப்படுகிறது.

வரும்,21 முதல் பள்ளிகளுக்கு, கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது. எந்த பள்ளியாக இருந்தாலும், பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும் பயிற்சியளிக்க அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. மே, 2ல் பள்ளிகளில் சேர்க்கை துவங்குகிறது. கோடை விடுமுறை முடிந்து,ஜூன், 1ல் பள்ளிகள் திறக்கப்படும். புதிய பாடத்திட்டம் மே, 1க்குள் தயாராகிவிடும். இவ்வாறு அவர் கூறினார்.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot