தமிழகம் முழுவதும் 2,740 உதவி பேராசிரியர்களை தேர்வு செய்ய நடவடிக்கை உயர்கல்வித்துறை அமைச்சர் தகவல்!!! - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Sunday 15 April 2018

தமிழகம் முழுவதும் 2,740 உதவி பேராசிரியர்களை தேர்வு செய்ய நடவடிக்கை உயர்கல்வித்துறை அமைச்சர் தகவல்!!!

தமிழகம் முழுவதும் 2,740 உதவி பேராசிரியர்களை தேர்வாணையம் மூலம் தேர்வுசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அரசு மகளிர் கலைக்கல்லூரி ஆண்டு விழா நடைபெற்றது. விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பேசினார்.விழாவில் அமைச்சர் பேசியதாவது:-தமிழகத்தில் ஆண்களைவிட பெண்களே அதிகஅளவில் எம்.பில் பட்டம் பெற்றுள்ளனர். இந்திய அளவில் தமிழகத்தில்தான்எம்.பில் பட்டம் பெற்றவர்கள் அதிக அளவில் உள்ளனர். இந்திய அளவில் அண்ணா பல்கலைக்கழகம் 10-வது இடத்தில் உள்ளது. பொறியியல் கல்வியில் இந்திய அளவில் 8-வது இடத்தில் உள்ளது. இந்திய அளவில் அரசு கலைக்கல்லூரி கல்வியில் தமிழகம் 5-வது இடத்தில் உள்ளது. 2018-19-ம் நிதிஆண்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.27,205 கோடி நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உயர் கல்வித்துறைக்கு கடந்த ஆண்டை விட ரூ.940 கோடி கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உதவி பேராசிரியர்கள்

தமிழகத்தில் கல்லூரிகளுக்கு 862 வகுப்பறைகள் மற்றும் 178 ஆய்வகங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தற்போது ரூ.210 கோடி கல்லூரிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.இப்போது முதல்கட்டமாக 1,863 கவுரவ பேராசிரியர்களும், இரண்டாம் கட்டமாக 1,661 கவுரவ பேராசிரியர்களும் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார்கள். தமிழகம் முழுவதும் உயர்கல்வித்துறையில் 2,740 உதவி பேராசிரியர்களை ஆசிரியர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்ய துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot