பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு - குழப்பத்தில் ஆசிரியர்கள் - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Thursday 19 April 2018

பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு - குழப்பத்தில் ஆசிரியர்கள்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் அனைத்து பள்ளிகளுக்கும் அனைத்து தேர்வுகளும் முடிந்ததால், ஏப்ரல் 21ம்தேதி முதல் விடுமுறை  அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் ஆசிரியர்கள் ஏப்ரல் 30ம் தேதி வரை சிறப்பு பயிற்சிக்கு வர வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை உத்தரவில்  ெதரிவிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் உயர் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மாதம் முதல் நடந்து வருகிறது.ஒன்று முதல் 9ம்  வகுப்புகளுக்கான அனைத்து தேர்வுகளும் நடந்து முடிந்துவிட்டது. இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவடைய உள்ளது. எனவே,இன்று ஒரு நாள்  மட்டும் பள்ளிகள் இந்தகல்வியாண்டில் செயல்படும் கடைசி வேலை நாளாகும்.

இந்நிலையில், நேற்று மாலை 4.45 மணி அளவில் அனைத்து மாவட்ட  கல்வி அதிகாரிகளுக்கும் (டிஇஓ) பள்ளிக் கல்வித்துறையில் இருந்து திடீர் உத்தரவு ஒன்று வந்தது. அதில் 20ம் தேதி பள்ளியை நடத்த வேண்டும்  என்றும்,21ம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே, 21ம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள  அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கு 21ம் தேதி முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

குழப்பத்தில் ஆசிரியர்கள்

கல்வியாண்டு வேலை நாட்களான 210ஐ கணக்கிட்டால் ஏப்ரல் 19ம் தேதியுடன் பள்ளி வேலை நாட்கள் முடிவடைகிறது. இதையடுத்து, அனைத்து  பள்ளி தலைமை ஆசிரியர்களும் நேற்று மாலை 4.30 மணி வரை பள்ளியை நடத்தி முடித்துவிட்டு 20ம் தேதி முதல் கோடை விடுமுறை என்று  அறிவித்தனர்.

இதனால் பள்ளி மாணவ, மாணவியர் மகிழ்ச்சியுடன் வீடுகளுக்கு சென்றனர்.இந்நிலையில் திடீரென வந்த கல்வித்துறையி–்ன் உத்தரவால் பள்ளி ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் அந்த மாணவர்களை 20ம்  தேதி (இன்று) எப்படி மீண்டும் வரவழைப்பது என்ற குழப்பமடைந்துள்ளனர்.

இன்று (20ம் தேதி) எப்படி பள்ளியை நடத்துவது என்று தெரியாமல்  உள்ளனர். ஆனால், இன்று அவசியம் பள்ளி திறக்கப்படவேண்டும் என்று கல்வி அதிகாரிகள் தெரிவித்து விட்டதால் 1 முதல் 9ம் வகுப்புகளுக்காக  இன்று பள்ளிகள் திறக்க வேண்டும். எனவே அந்த  மாணவர்களைஉள்ளூரில் இருந்து அழைத்து வர ஆசிரியர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot