நடப்பாண்டு மாணவர் சேர்க்கை நிறுத்தம் தமிழகத்தில் 20 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக்கு மூடு விழா: அரசாணை வெளியீடு - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Friday, 11 May 2018

நடப்பாண்டு மாணவர் சேர்க்கை நிறுத்தம் தமிழகத்தில் 20 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக்கு மூடு விழா: அரசாணை வெளியீடு

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் செயல்பட்டு வந்த ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், நடப்பாண்டு முதல் மாணவர் சேர்க்கை நிறுத்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தொடக்க கல்வித்துறையின் கீழ் இடைநிலை ஆசிரியராக பணியாற்ற 2 வருட ஆசிரியர் பட்டயப்பயிற்சி தகுதியாக உள்ளது.

அதன்படி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் கட்டுப்பாட்டின் கீழ், தனியார் மற்றும் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன. இதனிடையே ஆசிரியர் தகுதித் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதால், இந்த நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை குறைந்தது. இதையடுத்து, தமிழகத்தில் செயல்பட்டு வந்த பெரும்பாலான தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டன. அரசு சார்பில் 32 மாவட்டங்களில், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வந்தது.

இந்த பயிற்சி நிறுவனங்கள் மூலம் ஆண்டுதோறும் 3,500க்கும் மேற்பட்டோர் ஆசிரியர் பட்டயப்படிப்பு முடித்து வெளியே வந்தனர்.இந்நிலையில், 12 மாவட்டங்களில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தை மட்டும் தொடர்ந்து நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தவிர 20 மாவட்டங்களில் உள்ள பயிற்சி நிறுவனங்களில், நடப்பாண்டு மாணவர் சேர்க்கையை நிறுத்திக்கொள்ள முடிவு செய்து, நேற்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னை, திருவண்ணாமலை, கடலூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, பெரம்பலூர், திருவாரூர், புதுக்கோட்டை, விருதுநகர், தேனி, கோத்தகிரி, மற்றும் திருநெல்வேலி ஆகிய 12 இடங்களில் மட்டும் வரும் ஆண்டில் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் செயல்படும். மற்ற 20 மாவட்டங்களில் செயல்பட்டு வந்த ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், நடப்பாண்டு மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டுள்ளது.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot