பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 330 உதவி பொறியாளர்கள் இடங்களுக்கு 65 ஆயிரம் பேர் போட்டி - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Sunday, 20 May 2018

பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 330 உதவி பொறியாளர்கள் இடங்களுக்கு 65 ஆயிரம் பேர் போட்டி

பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 330 உதவி பொறியாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு இன்று நடந்தது. இந்த தேர்வை 65 ஆயிரம் பேர் எழுதினர்.
பொதுப்பணித் துறையில் சிவில், எலக்ட்ரிக்கல் பிரிவு, ஊரக வளர்ச்சித் துறையில் சிவில் பிரிவில், நெடுஞ்சாலைத்துறையில் சிவில் பிரிவு உள்ளிட்ட பணிகளில் காலியாக உள்ள 330 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு டிஎன்பிஎஸ்சி சார்பில் பிப்ரவரி 28ம் ேததி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த தேர்வுக்கு 68 ஆயிரம் 308 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில், 67,795 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். 513 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது.

இந்த பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு இன்று காலை நடந்தது. காலையில் சிவில், எலக்டரிக்கல் இன்ஜினியரிங் படிப்பில் இருந்து தனித்தனியாக கேள்வி கேட்கப்பட்டு இதன் அடிப்படையில் எழுத்து தேர்வு நடந்தது. பிற்பகலில் பொது, அறிவுத்திறன் தொடர்பான தேர்வு நடந்தது. சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, சேலம், தஞ்சாவூர், சிதம்பரம், வேலூர், ராமநாதபுரம், நாகர்கோவில், காஞ்சிபுரம், காரைக்குடி, புதுக்கோட்டை, ஊட்டி உள்ளிட்ட 15 இடங்களில் எழுத்து தேர்வு நடந்தது. இந்த தேர்வை சுமார் 65 ஆயிரம் பேர் எழுதினர்.

முன்னதாக காலை 8 மணி முதல் தேர்வு மையத்திற்கு  வந்தனர். உதவி பொறியாளர் தேர்வு கடந்த 2012 ஆண்டுக்கு பிறகு தற்போது தான் நடக்கிறது என்பதால் இன்ஜினியரிங் படித்து விட்டு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த பலர் அரசு வேலைக்கு எப்படியாவது சென்று விடவேண்டும் என்ற உணர்வவோடு தேர்வு எழுத வந்திருந்தனர். காலை 9.30 மணிக்கு தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வர்கள் தீவிர சோதனைக்கு பிறகே மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு மையங்கள் அனைத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தேர்வு மையங்களில் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot